Advertisement
சைவம்

சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான சௌ சௌ தயிர் கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதத்திற்கு சுவையான சௌ சௌ தயிர் கூட்டு செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், சௌ சௌ தயிர் கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

வயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்ற, சௌ சௌ உதவி செய்யும். சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும். அத்துடன் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எப்போதுவும் ஓரே காய்கறிங்களை வாங்கி அதனை வருப்பது, குழம்பு வைப்பது என்று மட்டுமே வீட்டில் செய்யாமல் சௌ சௌ போன்ற காய்கறிகளையும் குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக மாற்றுங்கள்.

Advertisement
Advertisement

இந்த சௌ சௌ தயிர் கூட்டு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். அதுவும் வெயில் காலத்தில், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்பது நல்லது. சௌ சௌ காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்க்க, உடல் நீரேற்றத்துடன் இருக்கும். இந்த சௌ சௌ தயிர் கூட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் சூப்பராக இருக்கும். ஆகவே இன்று சூப்பரான சௌசௌ தயிர்‌ கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

சௌ சௌ தயிர் கூட்டு | chow chow curd koottu recipe in tamil

Print Recipe
பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதத்திற்கு சுவையான சௌ சௌ தயிர் கூட்டு செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், சௌ சௌ தயிர் கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும்
Advertisement
திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இந்த சௌ சௌ தயிர் கூட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் சூப்பராக இருக்கும். ஆகவே இன்று சூப்பரான சௌசௌ தயிர்‌ கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword chow chow kootu
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 38

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • 1 சௌசௌக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு 
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • தேவையான அளவு உப்பு                             
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை

அரைக்க

  • 1 மேஜைக்கரண்டி தயிர்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் தேங்காய்

Instructions

  • சௌ சௌவை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கடலை பருப்பில் சிறிதளவு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • பின்‌ சௌ சௌவை குக்கரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைக்கவும்.
  • ஒரு மிக்ஸியில் ஊற வைத்த கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், தயிர், சீரகம், தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன்‌ நாம்‌ வேகவைத்த சௌசௌ சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் நாம்‌ அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  • தண்ணீர் நன்கு சுண்டி, வற்றி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான சௌ சௌ தயிர் கூட்டு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fat: 0.1g | Sodium: 920mg | Fiber: 1.7g | Sugar: 2.2g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Calcium: 2mg | Iron: 10mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

9 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

13 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

13 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

14 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

1 நாள் ago