வாயில் வைத்தவுடன் கரையும் தேங்காய் பால் பூரியை மாலை நேரத்தில் சாப்பிட உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் பசிக்கிறது என்று சொல்கிறார்களா? அப்போது அவர்களுக்கு வயிறு நிரம்பும் வகையிலும், சற்று ஆரோக்கியமானதாகவும் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் அல்லது மாலை நேர டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் கோதுமை மாவு மற்றும் தேங்காய் உள்ளதா? அப்படியானா

By Prem Kumar · 24/11/2025

மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் பசிக்கிறது என்று சொல்கிறார்களா? அப்போது அவர்களுக்கு வயிறு நிரம்பும் வகையிலும், சற்று ஆரோக்கியமானதாகவும் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் அல்லது மாலை நேர டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் கோதுமை மாவு மற்றும் தேங்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு மிகவும் ருசியான தேங்காய் பால் பூரி செய்து கொடுங்கள். இந்த பால் பூரியை மாலை நேரத்தில் மட்டுமின்றி, காலை நேரத்திலும் சாப்பிடலாம். இது இட்லி, தோசைக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.

முக்கியமாக இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்கள் விரும்பி சாப்பிடுமாறு அருமையாக இருக்கும். சுவை மிகுந்த இந்த இனிப்பு, பண்டிகை காலங்களிலும், விருந்தினர்கள் வருகையின் போதும் செய்து அசத்த சிறந்த தேர்வாகும். வாயில் வைத்ததும் கரையும் இந்த தேங்காய் பால் பூரி, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் சாப்பிட ஏதாவது வேண்டுமென்று கேட்பார்கள்.

அந்த நேரத்தில் நாம் கடையில் ஏதாவது வாங்கி கொடுப்போம் ஆனால் தினமும் கடைகளில் ஸ்நாக்ஸ்கள் வாங்கிக் கொடுத்தால் நிச்சயம் சமாளிக்க முடியாது. இதைத் தவிர்க்க விரும்பும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், ஒரு முறையாவது கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய இனிப்பான தேங்காய் பால் பூரி செய்துக் கொடுங்க. இதனை எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.

இதனையும் படியுங்கள் : ஆலு பூரி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!

Recipes AMP · Quick view
View full