கடன் பிரச்சினையில் இருந்து மீள உதவும் தேங்காய் பரிகாரம்!!

இன்றைய கால கட்டத்தில் கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். கடன் என்பது அனைவரின் வீட்டில் உள்ள விருந்தாளி மாதிரி வாரத்திற்கு ஒரு முறை மாதத்திற்கு 3 முறை வந்து விடும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் தி

By ·

இன்றைய கால கட்டத்தில் கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். கடன் என்பது அனைவரின் வீட்டில் உள்ள விருந்தாளி மாதிரி வாரத்திற்கு ஒரு முறை மாதத்திற்கு 3 முறை வந்து விடும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட்டி கடனை திருப்பி கேட்பார்கள் என்று மனது எப்பொழுதும் கவலையுடனும், படபடப்புடனுமே இருக்கும். ஒரு வகையில் கடன் சேர்வது என்னவோ நம்மால் தான் ஆனால் அதனை கொடுப்பதும் நாம் கடமை தானே. ஆனால் கடன் இல்லாத வாழ்வை யார் வாழ்கிறாரோ அவர்தான் பெரிய மனிதன் ஆகிறார். இவ்வுலகில் கடன் இல்லாத ஒருவரை கூட நம்மளால் பார்க்க முடியாது அந்த அளவுக்கு கடன் நம் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருக்கிறது. எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் கடனை தீர்க்க எந்த வழியும் தெரியாமல் தடுமாறுவார்கள். கடன் மேல் கடன் பட்டு கலங்கிப்போய் நிற்பார்கள். அந்த வகையில் கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கடன் தீர தேங்காய் பரிகாரம் 

எத்தனை காய்கள் இருந்தாலும், நாம் இறைவன் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் பொருள் தேங்காய் தான். பருப்பில்லாமல் கல்யாணமா என்பதைப் போல், தேங்காய் இல்லாமல் வேண்டுதலா எனக் கேட்கலாம். அந்த அளவிற்கு ஆன்மீகத்தில் தேங்காய் இன்றியமையாதது. அந்த வகையில் தாந்திரீக ரீதியாக இந்த தேங்காயை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்திற்கு பல மடங்கு சக்தி அதிகம். அப்படிப்பட்ட பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் பார்ப்போம். 

பரிகாரம் செய்யும் முறை 

இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு தேங்காயை எடுத்து அதனை ஒரு சிகப்பு நிற துணியில் கட்டி கொள்ளுங்கள். பின் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரச மரத்திற்கு சென்று, உங்கள் கையில் அந்த தேங்காயை வைத்து உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன்பிறகு இந்த தேங்காயை அரசமரத்தில் கட்டி விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை தான் செய்ய வேண்டும். பின் ஒரு சங்கடஹர சதுர்த்தியன்று காலையில் சூரியன் உதித்ததும் மஞ்சள் நிற நூலில் 9 தேங்காயை மாலையாக கோர்த்து விநாயகருக்கு மாலை போட்டு, விநாயகப் பெருமானை 9 முறை வலம் வந்து உங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை மாலை 5 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை மனதார செய்தால் எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் அதனை அடைப்பதற்கான வழி பிறக்கும் என்பது ஐதீகம். 

இதனையும் படியுங்கள் : கடன் சுமை நீங்க செய்ய வேண்டிய வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full