விக்னங்கள் தீர்க்கும் தேங்காய் வழிபாடு!!

எந்த ஊரு காரியத்திற்கு சென்றாலும் முதலில் நாம் வழிபாடு செய்வது விநாயகரை தான்."விக்னங்களை தீர்க்கும்"விநாயகர் என்று போற்றப்படுபவர் தான் விநாயகப் பெருமான். நம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் கஷ்டங்கள் தோல்விகள் அனைத்தையும் விநாயகப் பெருமான் அருள் இருந்தால் வென்று விடலாம். விநாயகருக்க

By ·

எந்த ஊரு காரியத்திற்கு சென்றாலும் முதலில் நாம் வழிபாடு செய்வது விநாயகரை தான்.”விக்னங்களை தீர்க்கும்”விநாயகர் என்று போற்றப்படுபவர் தான் விநாயகப் பெருமான். நம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் கஷ்டங்கள் தோல்விகள் அனைத்தையும் விநாயகப் பெருமான் அருள் இருந்தால் வென்று விடலாம். விநாயகருக்கு பலவிதமான வழிபாடுகள் செய்தாலும் இந்த தேங்காயை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை நிச்சயமாக செய்து பாருங்கள் இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம். அந்த வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

Vinayagar chathurthi

விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைப்பதன் முக்கியத்துவம்

சிவபெருமானின் முக்கண் அம்சமாக கருதப்படுவது மும்மூர்த்திகளையும் குறிப்பது தேங்காய். தேங்காயின் வெளிப்புற ஓடு ஆணவத்தையும் உள்ளிருக்கக்கூடிய இளநீர் அருள் என்னும் தெளிவையும் குறிக்கிறது. விநாயகருக்கு தேங்காயை உடைத்து அல்லது சமர்ப்பித்து வழிபாடு செய்வது ஆணவத்தை உடைத்து அருளை நமக்கு கொடுக்கும்.

சிதறு தேங்காய்

பரிகாரங்களில் மிகவும் பிரபலமான ஒன்று சிதறு தேங்காய் உடைப்பது. பரிகார முறைப்படி விநாயகர் ஆலயத்திற்கு சென்று நம்முடைய சங்கடங்கள் தடைகள் நீங்க மனதார வழிபாடு செய்துவிட்டு ஒற்றைப்படை எண்ணிக்கையில் விநாயகருக்கு முன்பாக தேங்காய் உடைக்கலாம். இப்படி உடைக்கும் போது நம்முடைய கஷ்டங்கள் தடைகள் கண் திருஷ்டிகள் அனைத்தும் சிதறிப் போகும். இந்த வழிபாட்டை திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பெரி இல்லாதவர்கள் காரிய தடை ஏற்படுபவர்கள் என அனைவரும் செய்யலாம்.

வழிபாட்டை செய்ய வேண்டிய நாட்கள்

விநாயகப் பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி புதன்கிழமை வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கல்வியில் சிறந்து விளங்குவதற்கு புதன்கிழமை என்று தேங்காய் உடைத்து வழிபடுவது மிகவும் நல்லது. குறிப்பிட்ட தேவைகளுக்காக தான் இந்த தேங்காய் பரிகாரம் உள்ளது.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி திதியில் அதாவது சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அப்பொழுது அவருக்கு பிடித்த கொழுக்கட்டை சுண்டல் போன்ற பொருட்களை நெய்வேதியம் ஆக வைத்து வழிபடலாம் விநாயகருக்கு அபிஷேகம் செய்யும்போது பூஜையின் போதும் தேங்காயை நெய்வேதியமாக வைக்கலாம். மேலும் தேங்காய் தீபம் போட்டு வழிபாடு செய்யும் போது நம்முடைய சகல பிரச்சனைகளும் தீர்ந்து நல்ல பல வழிகள் கிடைக்கும்.

தேங்காய் தீபம்

திங்கட்கிழமையன்று தேங்காயை இரண்டாக சரிசமமாக உடைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விநாயகருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து தடைகளும் விலகி வாழ்க்கையில் வெற்றியை அடைவீர்கள். விநாயகருக்கு செய்யப்படும் தேங்காய் பரிகாரம் குறைவான செலவு கொண்டது எனவே முழுமனதோடு தேங்காயை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும். தேங்காய் தீபம் போடும்போது “ஓம் விக்ன விநாயகாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி தேவியார் பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full