வீட்டில் ஆழகுக்கு வளர்க்கும் கலர் மீன்களை கூட இப்படி பாராமரித்தால் செல்வமும் பணமும் வீடு தேடி வரும்!
தற்போதைய காலகட்டங்களில் வீட்டில் அழகிற்காக வண்ணமயமான மீன்களை வாங்கி தொட்டியில் வளர்ப்பது பெருகி விட்டது ஆம் பலரது வீடுகளில் பொழுதுபோக்கிற்காகவும் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி வளர்ப்பது அழகுக்காக மட்டும் தான் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதற்
தற்போதைய காலகட்டங்களில் வீட்டில் அழகிற்காக வண்ணமயமான மீன்களை வாங்கி தொட்டியில் வளர்ப்பது பெருகி விட்டது ஆம் பலரது வீடுகளில் பொழுதுபோக்கிற்காகவும் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி வளர்ப்பது அழகுக்காக மட்டும் தான் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதற்காக மட்டும் நாம் இந்த கலர் மீன்களை வளர்க்க மாட்டார்கள் மீன்கள் வளர்ப்பதால் நம் வீட்டிற்கு எவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் கட்டாயம் இந்த கலர் மீன்களையும் வாங்கி உங்கள் வீட்டில் வளர்க்க தொடங்கி விடுவீர்கள். இது போன்று உங்கள் கலர் கலராக மீன்களை வளர்த்தால் நீங்கள் வேண்டாம் என்று சென்னாலும் அதிர்ஷ்டம் உங்கள் வீடி தேடி வரும். இந்த மீன்களை வளர்ப்பதிலும் சில முறைகள் உள்ளது. இந்த கலர் மீன்களை வாங்கி மீன் தொட்டியில் விட்டுவிட்டால் மட்டும் உங்கள் வீட்டில் செல்வம் பெருக தொடங்கி விடாது. மீன்களை சரியான வழிமுறைகளை பின்பற்றினால் இதனுடைய முழு பலனையும் நாம் அடையலாம்.
மீன்கள் நிறம்
முதலில் நாம் வைக்கும் மீன் தொட்டி கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருக்குமாறு வைத்து கொள்ளுங்கள். இந்த மீன் தொட்டியை கண்டிப்பாக சமையலறை மற்றும் படுக்கை அறையில் வைக்க கூடாது முடிந்த அளவிற்கு தொட்டியை வரவேற்பு அறையில், ஆட்கள் அதிகமாக அமர்ந்து செல்லும் இடத்தில் வைப்பது மிகவும் நல்லது. அதிலும் மீன்கள் சிகப்பு, ஆரஞ்சு, கோல்டன் வண்ண மீன்கள் மற்றும் கண்டிப்பாக இதனுடன் ஒரு கருப்பு கலர் மீன் இருக்க வேண்டும். நாம் கருப்பு கலர் மீன் வளர்ப்பதால் நம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்தி மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் நீக்கும் சக்தி கொண்டது. சிகப்பு நிற மீன் வளமையும் ஆரஞ்சு நிற மீன் வளத்தையும், கோல்டன் நிற மீன் செல்வத்தையும் தரும்.
மீன்களுக்கு உணவு கொடுப்பது
நாம் வளர்க்கும் மீன்களுக்கு உணவு கொடுக்கும் போது அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நபர்கள் மீன்களுக்கு பசிக்கும் என்று அளவுக்கு அதிகமாக உணவுகளை போடுவார்கள் இப்படி அளவுக்கு அதிகமான உணவை மீன்கள் சாப்பிடும் போது மந்தநிலையில் இருக்கும் அல்லது மீன்கள் இறக்கும் நிலைக்கு கூட செல்லும் மீன்கள் இறப்பது வீட்டிற்கு நல்லது கிடையாது. தொட்டியில் நாம் வளர்க்கு மீன்கள் எப்போதும் துள்ளி குதித்துக் கொண்டு மகிழ்சியாக நீந்தி கொண்டு இருக்க வேண்டுமே தவிர மந்தமாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் வீட்டிலும் மந்தநிலை வரும்.
ஏன் மீன் வளர்த்தால் செல்வம் வீடு தேடி வரும்
ஆனால் இந்த மீன்களை சரியான முறையில் பராமரித்தும் இறந்து போனால், நமக்கு துன்பம் வருவதை நாம் வளர்க்கும் மீன்கள் தடுத்து அந்த துன்பத்தை மீன்கள் எடுத்துக் கொள்ளும். மேலும் மீன்கள் எப்போதும் தொட்டியில் சுறுசுறுப்புடன் இருந்தால் அந்த இடத்தில் மகாலட்சுமி தங்கி இருப்பாள். ஏனென்றால் மீன்கள் மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமாகும் எனவே விஷ்னு இருக்கும் இடத்தில் கண்டிப்பாக மகாலட்சுமி இருப்பாள். அதனால் தான் மீன்கள் வளர்க்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பதற்காக நம் முன்னோர்கள் சொல்ல காரணம்.
மீன் வளர்ப்தில் முக்கியமானவை
மீன் வளர்ப்பதில் முக்கியமானது எதுவென்றால் தொட்டியில் எந்த நிற மீன்கள் வளர்க்கிறோமோ, மீண்டும் அதே நிறத்தில் உள்ள மீன்களை தான் நாம் வாங்கி தொட்டியில் வளர்க்க வேண்டும். வேறு நிறத்தில் இருக்கும் மீன்களை வாங்கி விடக்கூடாது, நாம் தொட்டில் விடும் மீன்கள் 9 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மீன்களை சாப்பிடும் மீன்களை வளர்க்க கூடாது. நாம் மீன்கள் வளர்க்கும் தொட்டி எப்போதும் சுத்தமாகவும் உள்ளே நீந்தும் மீன்கள் வெளிப்புறம் இருந்து பார்க்கும்போது கண்ணாடி போல் பளிச்சென்று தெரியுமாறு இருக்க வேண்டும். இது போன்று நாம் வீட்டில் மீன்கள் வளர்க்கும் போது செல்வம் கூரையை பிச்சி கொண்டு உள்ளே கொட்டும்.