சுவையான பேரிச்சை பழ மில்க் ஷேக் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கூட மிஞ்சமிருக்காது!

மில்க் ஷேக்குகள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ண கூடியது. நிறைய மில்க் ஷேக்குகள் அருந்துவதற்கு கடைகளில் கிடைக்கிறது. ஆனால் நாமே சுவையாகவும் சத்தாகவும் பேரிச்சம் பழம் மற்றும் டிரை ப்ரூட்சை வைத்து பேரிச்சம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பேரிச்சம்பழம் மில்ஷேக

By Prem Kumar · 18/4/2024

மில்க் ஷேக்குகள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ண கூடியது. நிறைய மில்க் ஷேக்குகள் அருந்துவதற்கு கடைகளில் கிடைக்கிறது. ஆனால் நாமே சுவையாகவும் சத்தாகவும் பேரிச்சம் பழம் மற்றும் டிரை ப்ரூட்சை வைத்து பேரிச்சம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பேரிச்சம்பழம் மில்ஷேக்கில் அதிக அளவு இரும்பு சத்து நார்ச்சத்து நிறைய வைட்டமின்கள் எல்லாம் இருக்கிறது.

குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் கடைகளிலிருந்து மில்க் ஷேக்குகள் ஜூஸ்கள் வாங்கித் தருவதை விட நாமே செய்து கொடுக்கும் பொழுது அதன் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. குழந்தைகளுக்கும் சத்து நேரடியாக செல்கிறது காரணம் நாமே செய்து கொடுக்கும் பொழுது நமக்கு ஏற்படும் மன திருப்தி அவர்களுக்கு மகிழ்ச்சி என இரண்டும் நிறைந்திருக்கிறது. பேரிச்சை பழம் உலர்ந்த நட்ஸ்கள் உடலுக்கு வலிமை தரக்கூடியவை.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கும் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கும் இவை பயன்படுகின்றன. இவற்றை பாலோடு கலந்து உண்ணும் பொழுது அதிக அளவில் கால்சியம் வைட்டமின் புரோட்டின் இரும்பு சத்து அனைத்தும் கிடைக்கின்றது. இதில் சர்க்கரை சேர்க்காமல் செய்வதால் இயற்கையான சுவையுடன் மிகவும் சத்தாக இருக்கும். பேரிச்சம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்தின் செயல்பாட்டை வலுவாக்குகிறது. கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம்பழத்தை உண்டு வருவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் எடையை குறைக்கலாம். பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்.

மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும். இப்போது சுவையானசத்து மிக்க பேரிச்சம்பழ மில்கஷேக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full