நினைத்த காரியம் நடக்க ஏற்ற வேண்டிய தீபம்!

பொதுவாக அனைவரது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது முக்கியமான ஒன்று. தீபம் ஏற்று வழிபாடு செய்யும்போது நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்று கூறுவார்கள். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்ப்பதற்கு நம் வீட்டில் இருளை நீக்கி ஒளியை ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்

By ·

பொதுவாக அனைவரது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது முக்கியமான ஒன்று. தீபம் ஏற்று வழிபாடு செய்யும்போது நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்று கூறுவார்கள். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்ப்பதற்கு நம் வீட்டில் இருளை நீக்கி ஒளியை ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்வதற்கும் நாம் நினைத்த காரியங்கள் நினைத்தபடி முடிவதற்கும் ஏற்ற வேண்டிய தீபம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முப்பெரும் தேவி

பொதுவாக தீபத்தில் சரஸ்வதி பார்வதியின் லட்சுமி மூன்று பேரும் அதன் உடன் மகாவிஷ்ணு பிரம்மா சிவன் என்ற முப்பெரும் தேவர்களும் குடியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருக்கிறது. தீபம் ஏற்றும் போது சுமங்கலி பெண்களுடைய கைகளால் தீபம் ஏற்றுவது நல்லது. அதீத பலன்கள் இதனால் கிடைக்கும் என்றும் சொல்லலாம் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் தீபம் ஏற்றுவது தான் மிக மிக சிறப்பான ஒன்று.

மஞ்சள் விளக்கு

வீட்டில் சுபகாரிய பேச்சு நடக்கும் போது எந்தவித தடையும் இல்லாமல் நடந்து முடிவதற்கு காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து அதில் அகல் விளக்கு போல் செய்து நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் தொடர்ச்சியாக இந்த தீபத்தை ஏற்றும் போது சுபகாரிய தடைகள் நீங்கும்.

சந்தன விளக்கு

பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் வேலையில் நல்ல முன்னேற்றம் வேண்டும் என்றால் தவம் கொடுத்த நேரத்தில் சந்தனத்தை தண்ணீர் ஊற்றி பிசைந்து விளக்கு போல் தயார் செய்து அதன் நினைவு ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதால் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

தடைகள் நீங்க

விளக்கு ஒரு சிலர் எந்த காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் அதனால் மன கஷ்டங்கள் அதிகமாக இருக்கும் யாரிடமும் இதனை சொல்ல முடியாத சூழலில் தீய சக்திகளால் பாதிப்பு இருந்தால் கூட குங்குமத்தை அகல் விளக்கு போல் தண்ணீர் ஊற்றி பிசைந்து தயார் செய்து கொள்ள வேண்டும் அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் தீய சக்திகள் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த தீப வழிபாடுகளை உங்கள் வீட்டில் செய்து நல்ல பலன்களை பெறுங்கள்.

இதனையும் படியுங்கள் : வெற்றி கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்!

Recipes AMP · Quick view
View full