கடன்‌ தீர்ந்து செல்வம் மற்றும் பணம் மலை போல் சேர தீபாவளியன்று இந்த 3 தீபங்களில் ஒன்றை மட்டும் கட்டாயம் ஏற்றுங்கள் போதும்!

உலகம் முழுவதும் இந்தியர்களால் மிக முக்கியமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. தீபாவளி அன்று வருகிற அமாவாசை திதியில் மகாலட்சுமி தாயார் பூலோகத்திற்கு வந்து மக்களுடைய குறைகளை தீர்த்து வைப்பார் என்று புராணம் கூறுகிறது. இந்த அமாவாசை நாளில் நாம் பூஜை செய்து வழ

By ·

உலகம் முழுவதும் இந்தியர்களால் மிக முக்கியமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. தீபாவளி அன்று வருகிற அமாவாசை திதியில் மகாலட்சுமி தாயார் பூலோகத்திற்கு வந்து மக்களுடைய குறைகளை தீர்த்து வைப்பார் என்று புராணம் கூறுகிறது. இந்த அமாவாசை நாளில் நாம் பூஜை செய்து வழிபடும் போது நம்முடைய துன்பம் எல்லாம் நீங்கி, வாழ்வில் சகல வளமும் கிடைக்கும். நாம் கேட்கும் வரங்களை அன்னை கட்டாயம் கொடுத்து அருள்வாள் என்பது ஐதீகம்.

தீபாவளி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது பட்டாசுகளும், பலாகாரங்களும் தான். ஆனால், தீபாவளி அன்று செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரிவதில்லை. தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான நாளில் நமக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய பூஜை முறையை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

லட்சுமி குபேர பூஜை

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இந்த பூஜை மேற்கொண்டால் சிறப்பு மிக்கது. வேலை அப்படி கடைப்பிடிக்க முடியாதவர்கள் சில விசேஷ நாட்களில் இந்த லக்ஷ்மி குபேர பூஜை மேற்கொள்ளலாம் அப்படிப்பட்ட ஒரு நாள் தான் இந்த தீபாவளி திருவிழா. தீபாவளி அல்லது தீப ஒளித் திருநாள் என்பது இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். இந்த நன்நாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை.

லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடும் முறையாகும். இந்த பூஜையைஅதிகாலை 04.00 மணி முதல்‌ 06.00 மணிக்குள் செய்யலாம். அல்லது மாலை 06.00 மணி முதல்‌ 07.00 மணிக்குள் செய்யலாம். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார் என்பது ஐதீகம்.

தீப வழிபாடு

இந்த லட்சுமி குபேர பூஜையை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இந்த தீப முறையை பின்பற்ற வேண்டும். தீபாவளி நாளில் தீபம் ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள். லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாக தீபாவளியன்று வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்த நாளில் மூன்று வகையான தீபத்தை நம் வீட்டில் ஏற்ற வேண்டும். முதலாவதாக, வீட்டில் உள்ள குத்து விளக்கு அல்லது ஐந்து முகம் கொண்ட அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். பூஜை அறையில் ஐந்துமுக விளக்கு வைத்து, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.

இரண்டாவதாக குபேர விளக்கு, குபேர விளக்கு இல்லாதவர்கள் புதிதாக கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஒரு மண் விளக்கில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு, நெய் ஊற்றி, பச்சை நிற திரியால் விளக்கு ஏற்றுங்கள். மூன்றாவதாக நெல்லிக்காய் விளக்கு, இதற்கு இரண்டு நெல்லிக்காய்களை வாங்கி அதனுள் இருக்கும் கொட்டையை அகற்றி விடுங்கள். பின்ன சிறிதளவு நெய்விட்டு திரி போட்டு இந்த விளக்கை ஏற்றி விடுங்கள். இந்த மூன்று விளையும் வடக்கு பக்கம் பார்த்தவாறு தான் ஏற்ற வேண்டும். ஏனென்றால் வடக்கு திசை என்பது குபேரருக்கு உகந்த திசையாகும். தீபாவளியன்று நெய் தீபம் ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்நாளில் பசு நெய்யில் தீபம் ஏற்றினால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். அதனால் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதியில் இந்த மூன்று தீபங்களில் ஏதாவது ஒன்றை கட்டாயம் நாம் ஏற்ற வேண்டும். நம்பிக்கையோடு நாம் இதை மேற்கொள்ளும் பொழுது எல்லாவிதமான செல்வமும் நமக்கு கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : லஷ்மி தேவியின் அருள் கிடைக்க தீபாவளி பண்டிகைக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து விடுங்கள்!

Recipes AMP · Quick view
View full