லஷ்மி தேவியின் அருள் கிடைக்க தீபாவளி பண்டிகைக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து விடுங்கள்!
தீபாவளி அன்று வீட்டில் லட்சுமி தேவியின் கடாக்ஷம் கிடைப்பதற்காக லட்சுமி பூஜை செய்கிறோம். இந்த பூஜைக்கு முன்பு உங்கள் வீட்டில் இருந்து சில பொருட்களை அப்புறப்படுத்தி விட்டால் லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். அப்படி எந்த பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத
தீபாவளி அன்று வீட்டில் லட்சுமி தேவியின் கடாக்ஷம் கிடைப்பதற்காக லட்சுமி பூஜை செய்கிறோம். இந்த பூஜைக்கு முன்பு உங்கள் வீட்டில் இருந்து சில பொருட்களை அப்புறப்படுத்தி விட்டால் லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். அப்படி எந்த பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசம் முடிந்து இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டுக்கொண்டு ராமர் அயோத்திக்கு வந்த நாளை தீபாவளியாக கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த தீபாவளி அன்று அமாவாசை அன்று வந்ததால் ராமர் வரும் தினத்தன்று அயோத்தி ஒளிமயமாக இருக்க வேண்டும் என்று தீபங்களை ஏற்றி தீபத்திருநாளாக கொண்டாடுகின்றனர். அப்படி தீபத்திருநாளான தீபாவளி அன்று அனைவரது இல்லத்திலும் லட்சுமி குபேர பூஜை நடைபெறும். அப்படி இந்த தீபாவளி திருநாள் கொண்டாடத்திற்கு முன்பு உங்கள் இல்லங்களில் இருந்து சில பொருட்களை அகற்றி விட்டீர்களானால் இல்லத்தில் லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆகையால் இந்த சில பொருட்களை வீட்டில் இருந்து அகற்றுவதால் லட்சுமிதேவி நிரந்தரமாக இல்லத்தில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அப்படி எந்தெந்த பொருட்களை வீட்டில் இருந்து அகற்றிவிட்டு லட்சுமி தேவியின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பதை பார்க்கலாம்.
உடைந்த கண்ணாடி
உடைந்து போன கண்ணாடிகள் வீட்டில் இருந்தால் அவ்வற்றை அகற்றி விடுங்கள். உடைந்து போன கண்ணாடிகள் அபசகுனமாக கருதப்படுகின்றன. ஆகையினால் இல்லத்தில் உடைந்து போன கண்ணாடிகள் இருந்தால் அகற்றி விடுவது நல்லது கண்ணாடிகளை அகற்றுவதால் லட்சுமிதேவியின் அருள் இல்லத்தில் கிடைப்பதற்கு வழிவகுக்கும் . ஆகையால் தீபாவளிக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்யும் பொழுது உடைந்து போன கண்ணாடிகள் இருந்தால் அவற்றை சுத்தம் செய்து வெளியே எடுத்து விடுங்கள்.
நின்று போன கடிகாரம்
உங்கள் வீட்டில் நின்று போன கடிகாரம் அல்லது உடைந்து போன கடிகாரங்கள் இருந்தால் அவற்றை உடனே நீக்கி விடுங்கள். நின்று போன அல்லது உடைந்து போன கடிகாரங்கள் அபசகுணமாக கருதப்படுகின்றன. இது நின்று போன கடிகாரமாக இருந்தால் புதிதாக பேட்டரி வாங்கி போட்டு ஓட வைக்கலாம். அப்படி இல்லையென்றால அது அபசகுணமாக கருதப்படுகிறது. ஆகையால் உடைந்த கடிகாரங்கள் நின்று போன கடிகாரங்களை அப்புறப்படுத்தி விடுவது மிகவும் நல்லது.
சேதமடைந்த ஜன்னல்கள் கதவுகள்
வீட்டில் ஏதாவது சிதிலமடைந்த சேதம் அடைந்த ஜன்னல்கள் அல்லது கதவுகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடவும். ஜன்னல்கள் கதவுகள் மூடும் பொழுது சத்தம் கேட்டாலோ அவற்றையும் எண்ணெய் போட்டு சரி செய்து வைத்துக் கொள்ளவும். தீபாவளிக்கு முன்பு கதவுகள் ஜன்னல்கள் அனைத்தையும் சரி செய்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது லட்சுமி தேவியின் அருள் கிடைக்க இதை செய்ய வேண்டும்.
உடைந்த சிலைகள்
உடைந்த சிலைகள் அல்லது உடைந்து போன சாமி படங்களை பூஜை அறையில் வைத்திருப்பது அபசகுணமாக கருதப்படுகிறது. ஆகையால் இந்த தீபாவளிக்கே முன்பு சுத்தம் செய்யும் பொழுது அவற்றை எடுத்து அப்புறப்படுத்தி விடுவது மிகவும் நல்லது. சிதிலமடைந்த சிலைகளை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லதன்று. ஆகையால் உடைந்து போன சிலைகள் அல்லது சாமி படங்களில் ஏதேனும் இருந்தால் சாமி படங்களில் உடைந்த கண்ணாடிகளில் இருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்தி விடுவது லக்ஷ்மி தேவிக்கு அருள் கிடைக்க வழிவகுக்கும். ஆகையால் இப்படி சீதிலமடைந்த சிலைகள் அல்லது உடைந்து போன சாமி படங்கள் இருந்தால் அவற்றை கோவில்களில் கொண்டு போய் வைத்து விடுவது நல்லது. ஆற்றிலோ ஏரிகளிலோ எரியும் பொழுது அவை யாருக்காவது உடைந்து மற்றவர் காலில் படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது இவற்றை கோவில்களில் வைத்து விடுவது சிறந்தது.
துருபிடித்த இரும்பு
துருப்பிடித்த பொருட்கள் இல்லத்தில் இருந்தால் தீபாவளிக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்யும் பொழுது அவற்றையும் அப்புறப்படுத்தி விடுங்கள். இந்த துருப்பிடித்த பொருட்களில் ராகு மற்றும் சனியின் எதிர்மறை செல்வாக்கை அதிகரிப்பதாக இருப்பதால் அவற்றை சுத்தம் செய்து அப்புறப்படுத்தி விடுவது மிகவும் நல்லது. ஆகையால் இந்த துருப்பிடித்த பொருட்களையெல்லாம் இல்லத்திலிருந்து சுத்தம் செய்து விடுங்கள்.
இப்படி வீட்டில் உள்ள உடைந்த கண்ணாடி, ஓடாத நின்று போன கடிகாரங்கள், சீதிலமடைந்த ஜன்னல்கள் கதவுகள் உடைந்து போன சிலைகள், துருப்பிடித்த இரும்புகள் போன்றவற்றை அகற்றிவிட்டு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடுங்கள் லட்சுமிதேவியின் அருள் உங்கள் இல்லத்தில் பரிபூரணமாக கிடைக்கும்.