- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். குஸ்காவில் பல வகை உண்டு. அதில் பிளேன் குஸ்கா, பன்னீர் குஸ்கா, மஷ்ரூம் குஸ்கா, மட்டன் குஸ்கா, மற்றும் தக்காளி குஸ்கா பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா.
குஸ்கா செய்த பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் குஸ்கா சாப்பிட்டாலும் திகட்டாது. நீங்கள் குஸ்கா பிரியரா? அதுவும் திண்டுக்கல் ஸ்டைலில் செய்யப்படும் பிரியாணியை விரும்பி சாப்பிடுபவரா? உங்களுக்கு இந்த திண்டுக்கல் குஸ்காவை வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் உங்களுக்காக இந்த திண்டுக்கல் குஸ்காவை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த குஸ்கா செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த குஸ்காவை பேச்சுலர்கள் கூட செய்து சுவைக்கலாம். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த குஸ்காவின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான குஸ்காவை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் அரிசியை நன்கு கழுவி விட்டு 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாச்சி பூ சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, தயிர், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும், அரிசியை சேர்த்து நன்கு கிளறி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான திண்டுக்கல் குஸ்கா தயார். இதற்கு வேகவைத்த முட்டை, கத்திரிக்காய் தொக்கு, வெங்காய பச்சடி வைத்து பரிமாறலாம்.






