காலை உணவிற்கு ஆரோக்கியமான மற்றும் விரைவான வெள்ளரிக்காய் சாலட் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!
வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. இந்த காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்த
வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. இந்த காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுக் கொண்டே வேலை பார்ப்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் சாலட். செய்வதும் எளிது சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும். வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும்.
பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவு முறையில் சாலட்கள் எப்போதும் முக்கியமானவை. அந்த வகையில் நாம் இன்று வெள்ளரிக்காய் சாலட் எப்படி செய்வதென்று பார்க்கலாம். வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முக்கியமானது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும். தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச உதவுவதோடு அது குடல் இயக்கத்தை திறம்பட செயல்பட வைக்கிறது. தினமும் இந்த வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது. வாருங்கள் இந்த வெள்ளரிக்காய் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சுடச்சுட வெள்ளரிக்காய் பஜ்ஜி மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்!!