இந்த ஒரு பொருள் உங்கள் பர்ஸில் இருந்தால் போதும் 10 ருபாய் செலவு செய்தால் 10 மடங்காக திரும்ப வரும்!

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது. திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து

By ·

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது. திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து கையில் இருக்கும் பணம் அனைத்தும் செலவாகி விடுகிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். நம்மளும் அதுபோல் சூட்சமத்தை கடைபிடித்தால் நமது கையிலும் பணம் தாராளமாக புரலும். அதற்கு இந்த ஒரு பொருளை நமது பரிசில் வைத்துக் கொண்டாலே போதுமானது.

நமக்கு பல விதத்திலும் நன்மைகள் தரக்கூடியது ஏலக்காய். எல்லா நல்லதையும் வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த ஏலக்காய்க்கு உண்டு. ஏலக்காயை வைத்து வசியம் செய்யக்கூடிய நிறைய பரிகாரங்கள் நமக்கு முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. எந்த பரிகாரம் ஆனாலும் அதை முழு மனதுடன் இறைவனை வேண்டி செய்தால் நிச்சயம் நாம் வேண்டி கொள்வது நடக்கும். அந்த வகையில் இந்த ஆன்மீக பதிவில் ஏலக்காயை வைத்து செய்யும் பரிகாரம் பற்றி பார்ப்போம்.

பர்சில் பணம் சேர ஏலக்காய்

நமக்கு எப்பொழுதெல்லாம் பணத் தட்டுப்பாடு வருகிறதோ அப்பொழுது இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு வரும் பணம் தட்டுப்பாட்டை நம்மளால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலும். இதற்கு நாம் இரண்டு ஏலக்காய்களை எடுத்துக் கொண்டாலே போதும். அது மட்டும் இல்லாமல் இது மிகவும் எளிமையான பரிகாரமும் கூட. இதனை செய்வதன் மூலம் பணத்தட்டுப்பாடு மட்டுமல்லாமல் கடன் வாங்குவதையும் நம்மளால் தவிர்க்க இயலும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக மகாலட்சுமி மற்றும் பெருமாள் புகைப்படம் இருக்கும். உங்களுக்கு எப்பொழுது பணத்தட்டுப்பாடு எழுகிறதோ அப்பொழுது இந்த இரண்டு ஏலக்காய்களை எடுத்து தெய்வங்களின் முன்னிலையில் வைத்து உங்களுக்கு இருக்கும் பணம் கஷ்டத்தை சொல்லி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் பணம் கஷ்டங்கள் நீங்கும். இதனை செய்தால் பணம் கோடி கோடியா கொட்டுமா என கேட்டால் அது இல்லை, ஆனால் உங்களுக்கு இருக்கும் தட்டுப்பாடு மட்டும் நீங்கும்.

புதிய ஏலக்காயை பர்ஸில் வையுங்கள்

ஏதோ ஒரு வழியில் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். அதற்கு அந்த தெய்வங்கள் வழிவகுக்கும். இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் செய்தாலே உங்களுக்கு ஒரு மாற்றம் தெரியும். நீங்கள் எப்பொழுதெல்லாம் பணம் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களோ அப்பொழுது இதனை செய்யும் பொழுது நீங்கள் நல்ல பலனை அடைவீர்கள்.

நீங்கள் பரிசில் வைத்திருக்கும் இந்த ஏலக்காயின் வாசனை போனவுடன் அது காய்ந்து போய் இருக்கும். அதனை எடுத்து நீங்கள் வீட்டில் வளர்க்கும் செடி, கொடிகள் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். திரும்பவும் உங்களுக்கு எப்பொழுது பணக்கஷ்டம் எழுகிறதோ அப்பொழுது இந்த பரிகாரத்தினை செய்து புதிய ஏலக்காயினை உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எளிய பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்களும் செய்து பலன் அடைந்து கொள்ளுங்கள்.

Recipes AMP · Quick view
View full