Advertisement
சட்னி

சுவையான எள்ளு புதினா சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால்

இதையும் படியுங்கள் : தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி செய்வது எப்படி ?

Advertisement

கண்டிப்பாக இந்த எள்ளு புதினா சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த எள்ளு பதினா சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

சுவையான எள்ளு புதினா சட்னி

Print Recipe
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த எள்ளு புதினா சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும்.
Course Breakfast, chutney, dinner
Cuisine Indian, TAMIL
Keyword ELLU PUTHINA CHUTNEY, எள்ளு புதினா சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 person
Calories 70

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
    Advertisement

Ingredients

  • 5 TBSP வெள்ளை எள்ளு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 TBSP கடலை பருப்பு
  • 2 TBSP உளுந்த பருப்பு
  • 4 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 4 சிவப்பு வத்தல்
  • 1 கட்டு புதினா
  • 3 தக்காளி
  • உப்பு                              தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவயான அளவு
  • ¼ TBSP கடுகு
  • ¼ TBSP உளுந்த பருப்பு
  • 1 வர மிளகாய்
  • கருவேப்பிலை தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெள்ளை எள்ளு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை கீழ
    Advertisement
    இறக்கி வறுத்து எடுத்த பொருட்களை ஒரு பவுலில் எடுத்து சூடு ஆறு வரை வைத்து இருங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறும் வரை காத்திருக்கவும்.
  • பின்பு பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய், சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் பின்பு ஏற்கனவே வறுத்தெடுத்த பொருட்களுடன் இதையும் சேர்த்து ஆறவிடுங்கள் இரண்டு இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் புதினா இலையை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் தக்காளி பச்சை வாடை போயி மென்மையாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் இதையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு நாம் தயார் செய்துள்ள சட்னியையும் இதில் ஊற்றி இரண்டு நிமிடம் நன்கு வதக்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான் எள்ளு புதினா சட்னி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4gram | Calories: 70kcal | Carbohydrates: 15g | Protein: 3.8g | Fat: 0.9g | Saturated Fat: 0.2g | Sodium: 31mg | Potassium: 569mg | Fiber: 8g | Calcium: 3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

12 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

12 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

12 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

13 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

13 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

17 மணி நேரங்கள் ago