பணம் செலவு செய்ய செய்ய திரும்ப உங்களிடம் வர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

பலரும் பணம் நம்மிடம் தங்குவதில்லை, கடன் கொடுத்தவர்கள் திருப்பி தராமல் இழுத்து அடிக்கிறார்கள், எனக்கு வருகிற வருமானத்தை விட நான் செய்யும் செலவுகள் அதிகமாக இருக்கிறது என்று இது போன்ற பிரச்சனைகளை பலர் சந்திக்கிறார்கள். இப்படி பணம் சம்பந்தமான பிரச்சினைகள் வருபவர்கள் பணத்தை கையாளும்போ

By Prem Kumar · 12/10/2024

பலரும் பணம் நம்மிடம் தங்குவதில்லை, கடன் கொடுத்தவர்கள் திருப்பி தராமல் இழுத்து அடிக்கிறார்கள், எனக்கு வருகிற வருமானத்தை விட நான் செய்யும் செலவுகள் அதிகமாக இருக்கிறது என்று இது போன்ற பிரச்சனைகளை பலர் சந்திக்கிறார்கள். இப்படி பணம் சம்பந்தமான பிரச்சினைகள் வருபவர்கள் பணத்தை கையாளும்போது ஒரு சில தவறு செய்து விடுகிறார்கள் அப்படி நாம் பணத்தை கொடுக்கும் போது வாங்கும் போது அல்லது நம் வீட்டில் ஒரு சில ஆன்மீக சம்பந்தமான விஷயங்களை சரிவர செய்து வரும்போது அந்த பணம் என்பது நம்மிடம் நிலையாக இருக்கும் நம் செலவு செய்யும் பணம் மறுபடியும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு வருமானமாக வரும். இதை பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

பண வசிய மந்திரம்

நாம் பணத்தை எந்த விஷயத்திற்காகவும் கையில் இருந்து கொடுக்கும்போது, செலவு செய்யும் போதும் யாரும் பார்க்காத வண்ணம் நாம் செலவு செய்யும் பணத்தை நெஞ்சூக்கு நேராக பிடித்து கொண்டு “ஓம் ஸ்ரீ நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி” என்று ஐந்து முறை சொல்லி விட்டு பின்பு பணத்தை அடுத்தவர்களிடம் கொடுங்கள் இப்படி நாம் செய்வது பணத்தை வசியம் செய்வதற்கான ஒரு மந்திரம் தான். இதே பணம் திரும்ப நம்மிடம் ஏதாவது ஒரு வகையில் வந்து சேரும்.

எலுமிச்சை பழம்

அதேபோல் நீங்கள் ஏதும் முக்கியமான விஷயத்திற்காக வெளியே செல்லும்போது பணம் சம்பந்தமான விஷயத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு எலுமிச்சம் பழம் ஒன்று எடுத்துக் கொண்டு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்” என்ற மந்திரத்தை ஒரு ஆறு தடவை சொல்லிக்கொண்டு உங்களுடன் வைத்துக் கொண்டு வெளியே செல்லுங்கள் நீங்கள் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடியும்.

வருமானத்தின் முதல் செலவு

நீங்கள் வருமானத்திற்காக சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தாலும் ஏதாவது நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி உங்களுக்கு லாபம் அல்லது வருமானம் வரும்போது அந்த பணத்தில் இருந்து நீங்கள் முதலில் செலவழிப்பது உப்பு மற்றும் மல்லிகை பூ இந்த இரண்டில் ஏதாவது வாங்கும் செலவாக இருக்க வேண்டும். உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமான ஒரு பொருள் அதற்காக நாம் முதல் செலவு செய்யும் போது நீங்கள் சில செய்யும் அந்த பணம் திரும்ப உங்களிடம் வந்து சேரும்.

மகாலட்சுமி

உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையிலோ அல்லது எங்கள் வேலை பார்க்கும் இடங்களிலோ மகாலட்சுமி படத்திற்கு தினமும் காலை மாலை என தவறாமல் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இரண்டில் ஏதாவது ஊற்றி இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி கொள்ளுங்கள். பின் வீடு அல்லது கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டி வந்தால் பணம் உங்களிடம் வசியமாகும் இதனால் உங்களுக்கு பண வரவு இருந்து கொண்டே இருக்கும் கையில் பணம் இல்லை என்ற வார்த்தையை உங்கள் வாயிலிருந்து வராது.

தண்ணீர்

நீங்கள் குடிக்கும் தண்ணீரை வீட்டின் வட கிழக்கு மூலையில் வைத்து அந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழம் போட்டு வைத்திருந்தால். உங்களது வீட்டில் பணம் பற்றாக்குறை என்ற வார்த்தையை இருக்காது அந்த அளவிற்கு பணப்புழக்கம் வீட்டில் அதிகரிக்கும். இதை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வாருங்கள்.

இப்படி நாம் பணத்தை செலவு செய்யும் போது அல்லது வீட்டிலேயே இது போன்ற ஆன்மீகம் சம்பந்தமான சில செயல்களை அல்லது பரிகாரங்களை நாம் செய்யும் போது. நமது வீட்டில் பணம் சேர ஆரம்பித்து விடும் நாம் எவ்வளவு தான் செலவழித்தாலும் நம் கையில் இருந்து செலவான பணம் வேறு ஏதாவது வருமானம் வழியாக நம்மிடம் வந்துவிடும். அந்த பணத்திற்கே நம் மீது ஆசை வருவதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். அதனால் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full