நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற மற்றும் சுக்கிரனை மகிழ வைக்க வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு!
வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு நாளும் வழிபட்டால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் தீரும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை என்பது அம்பிகை, மகாலட்சுமி ஆகிய பெண் தெய்வங்களை வழிபட ஏற்ற நாளாக கருதப்படுகிறது. பிற நாட்களைக் காட்டிலும
வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு நாளும் வழிபட்டால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் தீரும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை என்பது அம்பிகை, மகாலட்சுமி ஆகிய பெண் தெய்வங்களை வழிபட ஏற்ற நாளாக கருதப்படுகிறது. பிற நாட்களைக் காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்ததாகும். எனவே, இந்த நாளில் எந்தவொரு வேண்டுதலை வைத்து வழிபட்டாலும் அது நிறைவேறும். அன்னை மகாலட்சுமிக்கு உரிய நாளான இது சுக்கிரன் கிரகத்துடனும் தொடர்புடையது. நினைத்ததெல்லாம் நிறைவேற முதலில் நாம் சுக்கிரனை மகிழ வைக்க வேண்டும். அதற்கு வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை எப்படி வழிபட வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரனும் மகாலட்சுமியும்
ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான், சொகுசு, வியாபாரம், காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஆனால் மகாலட்சுமி கொடுக்கும் செல்வ வளம் இல்லாமல் சொகுசு வாழ்க்கை சாத்தியப்படாது. வெள்ளிக்கிழமை நாள் சுக்கிரனுக்கு உகந்த நாள், அன்று லட்சுமியை வணங்கினால் சுக்கிரன் கடாட்சமும் கிடைக்கும். எனவே தான் வெள்ளிக்கிழமை, சுக்கிரன், லட்சுமி அன்னை என மூன்றும் தொடர்புடையதாக உள்ளது.
சுக்கிர வார வழிபாடு
சுக்கிர வாரம் என்று வெள்ளிக்கிழமையைச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமை என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கான அற்புதமான நன்னாள். சக்தியை வணங்குவதற்கு உரிய அற்புத நாள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படுகிற வெள்ளிக்கிழமை அன்று மாலை வேளையில், பூஜையறையில் விளக்கேற்றி, அம்மன் படத்திற்கு குங்குமம் மஞ்சள் வைத்து, மலர்கள் சார்த்தி, பாயசம் முதலான நைவேத்தியங்கள் வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபட்டால் சுக்கிர யோகத்தைத் தந்தருளுவாள் மகாலக்ஷ்மி தாயார். அதுமட்டுமல்லாமல் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் மிகுந்த பலன்களைத் தரும்.
நவகிரக வழிபாடு
தமிழ் மாதக் கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதப் பிறப்பு விஷ்ணுபதி காலம் எனப்படுகிறது. விஷ்ணுபதி காலத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாவிஷ்ணுவையும், தாயார் மகாலட்சுமியையும் மனதார வழிபட்டு மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம் போன்ற மலர்களைக் கொண்டு வழிபட்டால் சுக்கிரனின் அருள் மட்டுமல்ல, நவகிரகங்கள் அனைத்தின் அருளும் ஆசியும் கிடைக்கும்.
விளக்கு வழிபாடு
இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது விளக்கேற்றி வழிபடுவது. பொதுவாக விளக்கை மகாலட்சுமியின் அம்சம் என்பார்கள். ஆனால் விளக்கேற்றுவதில் நவகிரக தத்துவமும் அடங்கி உள்ளது. இதனால் தான் தோஷ பரிகாரங்கள், கஷ்டங்கள் தீர வேண்டும் என்றால் கோவிலுக்கு சென்று விளக்கேற்ற சொல்கிறார்கள். அந்த வகையில் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30 முதல் 12 மணி வரை) நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் வளங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
இதனையும் படியுங்கள் : வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைய ஏற்ற வேண்டிய தீபம்!