விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை!!
இந்து மதத்தில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் எனும் அறிவின் தெய்வத்தை வழிபடும் இந்த விழா, ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமுதாய நலனை உண்டாக்கும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பலரது
இந்து மதத்தில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் எனும் அறிவின் தெய்வத்தை வழிபடும் இந்த விழா, ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமுதாய நலனை உண்டாக்கும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பலரது இஷ்ட தெய்வமாக இருக்கக் கூடிய விநாயகப் பெருமானின் அவதார தினத்தை விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி வழிபாடு, ஆட்டம் பாட்டம் என பத்து நாட்கள் விழாவாக கொண்டாட்டமாக நடத்தப்படும் வழிபாடாகும். அதே சமயம் முழு முதற்கடவுளாக விநாயகப் பெருமானை உரிய வழிபாட்டு விதிமுறைகளை பின்பற்றி வழிபடுவதால் அவரின் அருள் முழுவதுமாக கிடைக்கும். விநாயகர் எனும் அறிவின் தெய்வத்தை வழிபடும் இந்த விழா, ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமுதாய நலனை உண்டாக்கும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவார்கள். இந்தப் பதிவில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது மற்றும் விநாயகரை வழிபடுவதற்குரிய விதிகளை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி 2025
விநாயகர் சதுர்த்தி என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான பண்டிகையாகும். இது தடைகளை நீக்கும் கடவுளான விநாயகரை வணங்கும் விஷேச தினமாகும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் நாள் புதன்கிழமை அன்று வருகிறது. சதுர்த்தி திதி ஆகஸ்ட் 26ம் நாள் மதியம் 2:22 மணி முதல் ஆகஸ்ட் 27ம் நாள் மாலை 3:53 மணி வரை இருக்கும். விநாயகர் சதுர்த்தி தினத்தில் மத்யஹ்ன பூஜை மிகவும் முக்கியமானதாகும். அந்த பூஜைக்கு சிறந்த நேரம் காலை 11:06 மணி முதல் பிற்பகல் 1:40 மணி வரை ஆகும். இந்த பண்டிகை பெரும்பாலும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு, விநாயகர் விஸர்ஜனம் செப்டம்பர் 6, 2025 அன்று நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை
விநாயகர் சதுர்த்திக்கு முன்தினம் வீடு முழுவதையும் சுத்தம் செய்து கொள்ளவும். விநாயகர் சதுர்த்தியன்று காலை எழுந்ததும் குளித்து சுத்தமான ஆடை அணிய வேண்டும். பின் பூஜையறையில் ஒரு சுத்தமான பலகையை எடுத்துக், அரிசி மாவால் கோலம் இட்டு அதன் மேல் வாழை இலையை வைத்து பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன் மேல் களிமண் பிள்ளையார் சிலையை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். விநாயகர் சிலை கண்டிப்பாக களி மண்ணால் செய்யப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனென்றால் விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலையை நீர் அல்லது ஆற்று நீரில் கரைத்துவிடுவது வழக்கம். களி மண்ணால் ஆன சிலை நீரில் கரையும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி களிமண்ணிற்கு தெய்வீக சக்தியை ஈர்க்கும் தன்மை உள்ளது. விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வரும் போது வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு உள்ளே அழைத்து வர வேண்டும். பின் விநாயகருக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, விநாயகருக்கு விருப்பமான பூக்களான தும்பைப்பூ, செம்பருத்தி, எருக்கம்பூ, அருகம்புல் போன்றவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
விநாயகருக்கு விரும்பத்தகுந்த நைவேத்தியங்களான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், பொரி, பழங்கள், வெல்லம், நெய் போன்ற 21 என்ற எண்ணிக்கையில் நைவேத்தியம் படைத்து வழிபட்டால் விநாயகரின் அருளை முழுமையாக பெற முடியும். சதுர்த்தி நாளன்று காலை 9.01 மணி முதல் 11.58 மணி மற்றும் மதியம் 1.31 மணி முதல் 3.50 மணி வரையில் பூஜையை செய்து முடிக்க வேண்டும். பூஜையில் 108 கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊர வைத்து மாலையாக கோர்த்து விநாயகருக்கு ஆணிவிக்கலாம் இதனால் கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். பூஜையின் போது விநாயகர் மந்திரங்களும், கணபதியஷ்டகமும் சொல்லிக் கொண்டு மனமார்ந்த பிரார்த்தனை செய்வது சிறப்பு. ஒவ்வொரு வீட்டிலும் விநாயகரை சிலர் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் வைத்துக் கொண்டு பின்னர் அதை நீர்நிலையில் கரைக்க எடுத்துச் செல்வது வழக்கம். அதுவே சரியான முறையும் கூட குறைந்தது விநாயகர் சிலையை மூன்று நாட்கள் வீட்டில் வைத்து பின் கரைக்க வேண்டும். இவ்வாறு விநாயகரை மனமுருகி நாம் வழிபடும் போது நம் வினைகள் ஓடும். மனம் சார்ந்த பிரச்னைகள் தீரும். நம் அறிவு பளிச்சிடும்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் முன்னேற விநாயகர் வழிபாடு