Advertisement
ஆன்மிகம்

தங்க நகை அடகுக்கு வைப்பதற்கு முன் இதை செய்யுங்கள்! நகை திரும்ப உங்களிடம் வரும்!

Advertisement

பணம் சம்பாதிப்பது கூட அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஒரு நாளைக்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு உண்டான வழிமுறைகள் இன்னைக்கு இருக்கு. இன்னைக்கு வரும் 1000 ரூபாயை செலவு செய்து விட்டு, நாளைக்கு பணம் தேவை எனும்போது கடன் வாங்கக் கூடிய பழக்கத்தை வைக்கக்கூடாது. இங்கு யாருக்கு தான் பணம் தேவை இல்லாமல் உள்ளது, எல்லோருக்கும் பண தேவை அதிகமாக உள்ளது. அந்த தேவையை நம்மளால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் பக்கத்தில் கடன் வாங்குவோம். அதுவும் முடியவில்லை என்றால், நம் நினைவிற்கு வருவது வீட்டில் இருக்கும் நகைகள் தான்.

நகையை அடகு வைப்பதற்கு முன்

நகையை அடகு வைத்து எப்படியாவது பணத்தை பெற்றுக் கொள்வோம். அதன் பின் அதனை திருப்புவதற்கு ஒரு போராட்டமே நம் வீட்டினுள் நடக்கும். அடகு வைத்த பிறகு செய்யக்கூடிய பரிகாரத்தை விட வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க அடகு வைப்பதற்கு முன்பே ஒரு பரிகாரத்தை செய்துவிட்டு அடகு வைத்தால் அந்த நகை விரைவில் நம்மிடம் திரும்பி வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசிக்க வேண்டும் செய்த பிறகு யோசிக்க கூடாது என்பார்கள்.

Advertisement

நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் பொழுது அந்த பிரச்சினை மட்டும் தான் நம்ம நினைவில் இருக்கும். அதனால் நகையை எப்படி திருப்ப வேண்டும் என்பதனை பற்றி யோசிக்காமல் நகையை அடகு வைத்து விடுவோம். அதனால் தான் அதனை திருப்ப முடியாமல் நாம் கஷ்டப்படுவோம். நகையை அடகு வைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்வதினால் நமது நகையை சீக்கிரம் திருப்பிவிட முடியும். இது அடகு வைப்பதற்கு மட்டுமல்ல, யாரேனும் நகையை கடனாக கேட்டால் கூட இந்த பரிகாரத்தை நாம் செய்துவிட்டு கொடுக்கும் பொழுது அவர்கள் நம்மை ஏமாற்றாமல் நகையை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது.

நகையை விரைவில் திருப்புவதற்கான பரிகாரம்

முதலில் நாம் அடகு வைக்க போகும் நகையை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும். பின்னர் அதனை கோமியத்தில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். கல் உப்பு வாங்கி அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி

Advertisement
நாம் எடுத்து வைத்திருக்கும் நகையை உப்பில் மூழ்கும்படி வைத்துக் கொள்ளவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது அப்படியே வைத்து விடவும். ஒரு மணி நேரம் கழித்து நம் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் சூடம் ஏற்றி நான் அடகுவைக்க போகும் இந்த நகை வெகு விரைவில் என் வீடு திரும்ப வேண்டும் என்று மனதார வேண்டி இதனை தண்ணீரில் மறுபடியும் கழுவி விட்டு அடகு வைக்கவும்.அடமானம் வைக்கும் பொழுது
Advertisement
அவர்கள் அடமான சீட்டு கொடுப்பார்கள். அந்த சீட்டை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த அடமானத் தொகையில் ஏதேனும் ஒரு சிறிய தொகையை எடுத்துக் கொள்ள வேண்டும். ரசீதில் அந்த தொகையை வைத்து நாம் ஏற்கனவே நகை வைத்திருந்த கல் உப்பில் சிறிது எடுத்து அதனுடன் வைத்து மடித்து, பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்து விட்டு கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். அன்றாடம் பூஜை செய்யும்பொழுது அதற்கும் தூப தீபம் காட்டி வழிபட வேண்டும்.

நம்ம நகை நம்மிடமே திரும்ப வரும்

இவ்வாறு செய்வதால் நாம் அடகு வைத்த நகை விரைவில் நம்மிடம் வந்து சேரும். யாராவது நம்மிடம் நகையை கடனாக கேட்டால் நமக்கு கொடுக்க மணம் வராது. அதற்கு காரணம் நகை விற்கும் விலை தான். எங்கே அவர் நகையை திரும்ப கொடுக்காமல் போய்விடுவாறோ என்று பயமும் கூட ஆனால், இனிமேல் நமக்கு அந்த பயம் தேவையில்லை. நகையை கடனாக கொடுப்பதற்கு முன்னர் அதனை சிறிது நேரம் கல் உப்பில் போட்டுவிட்டு கொடுத்தால், அந்த நகை நம்மிடம் திரும்ப வந்துவிடும். இதனை செய்வதற்கு முன்னரும் பின்னரும் நகையை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.இந்த எளிய பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதனை செய்து அடகு வைத்து நகையை சீக்கிரம் மீட்டுக் கொள்ளுங்கள்

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு c மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

27 நிமிடங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

51 நிமிடங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

54 நிமிடங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

3 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

4 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

4 மணி நேரங்கள் ago