வக்ரமடையும் குருவால் இனி இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!

நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதி

By ·

நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதிடத்தில், குரு பகவான் என அழைக்கப்படும் வியாழன் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடிய குரு பகவானால் அந்த ராசிக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். ஒரு ராசி உச்சம் பெற்றால் அதனால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

பொதுவாக குருபகவான் குழந்தை பாக்கியம் தொழில் செல்வம் மகிழ்ச்சி திருமணமாகாதவர்களுக்கு திருமணம் என பலவிதமான நன்மைகளை நடத்திக் கொடுப்பார்.‌ அறிவு, மகிழ்ச்சி, கல்வி, திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக இருக்கும் குரு பகவான், அக்டோபர் 9, 2024 அன்று வக்ர நிலையை அடைவார். தற்போது ரிஷப ராசியில் இருக்கும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாவார் என்பது குறிப்பிடத்தக்கது. குரு பகவான், அக்டோபர் 9, 2024 அன்று வக்ர பெயர்ச்சி அடையும் நிலையில், 2025 பிப்ரவரி 4ம் தேதி வக்ர நிவர்த்தி அட்டைவார். குருவின் வக்ர நிலையினால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

குருவின் வக்ர நிலையினால் மிதுன ராசிகள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். ‌பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன, இதன் காரணமாக வியாபாரத்தில் லாபம் இருக்கும் மற்றும் இந்த காலகட்டத்தில் தேங்கி நிற்கும் பணத்தையும் பெறலாம். பணம் சம்பாதிப்பதுடன், இந்த நேரத்தில் பணத்தையும் குவிப்பீர்கள். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அப்பாவினால் உதவி கிடைக்கும். மகளுக்கு திருமணம் கைகூடி வரும். பூர்வீக சொத்து வழக்குகள் முடிவுக்கு வரும்.

கடகம்

குருவின் வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பிரச்சனைகள் முடிவுக்கு வரும் மற்றும் சில நல்ல செய்திகளையும் காணலாம். உத்தியோகத்தில் வருமானம் அதிகரித்து வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிப்பதால் உங்களின் பொருளாதார கவலைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகத்துடனும் இருக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

குருவின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வரம் எனலாம். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிவடையும். நீங்கள் மன அமைதியை அனுபவிப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் உழைப்பு அதிகரிக்கும். திருமணமாகி இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாழன் பிற்போக்காக இருப்பதன் மூலம் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். உங்கள் ராசியை குருபகவான் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் சிறப்படையும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : சூரியன் பெயர்ச்சியால் ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

Recipes AMP · Quick view
View full