வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு அனுமான் வழிபாடு!!
வீரத்தில் சிறந்து விளங்கக்கூடிய ஹனுமான் அவர்களின் பாதங்களை இறுக பற்றி கொண்டால் அவர் நமக்கு வாழ்க்கையில் வெற்றி கொடுப்பார். செல்வந்தர் ஆகக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும் யாருக்கும் கிடைக்காத பதவி பலம் கிடைக்கும். அனுமான் பக்தர்களுக்கு அப்படி ஒரு வரத்தை நிச்சயமாக கொடுப்பார். வாழ்க்
வீரத்தில் சிறந்து விளங்கக்கூடிய ஹனுமான் அவர்களின் பாதங்களை இறுக பற்றி கொண்டால் அவர் நமக்கு வாழ்க்கையில் வெற்றி கொடுப்பார். செல்வந்தர் ஆகக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும் யாருக்கும் கிடைக்காத பதவி பலம் கிடைக்கும். அனுமான் பக்தர்களுக்கு அப்படி ஒரு வரத்தை நிச்சயமாக கொடுப்பார். வாழ்க்கையில் கெட்ட நேரம் ஒருவரை கெட்ட பாதையில் கூட்டிச்செல்லும். அந்த நேரத்தில் நாம் செய்வது தவறு என்று அறியாமலே ஒரு சிலர் தவறு செய்து விடுவார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்கள் அனுமானை வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். பண பிரச்சனை கடன் சுமை என அனைத்திலிருந்தும் வெளியே வருவதற்கு அனுமனை வழிபடும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அனுமான் மஞ்சள் கயிறு வழிபாடு
வாய்ப்புகள் முதலில் நம்மை நல்வழிப்படுத்த தவறான பாதையில் செல்லாமல் இருக்க செவ்வாய்க்கிழமை தோறும் அனுமானை வழிபாடு செய்ய வேண்டும். ஒரு மஞ்சள் கயிறு வாங்கி அதனை அனுமன் கோவிலுக்கு சென்று அங்கே அனுமன் பாதத்தில் வைத்து மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்து மீண்டும் அந்த கயிறை வாங்கி உங்கள் வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் குறுக்கு பாதையில் செல்ல மாட்டீர்கள் நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.
கெட்ட வழியில் செல்ல விடாமல் தடுக்கும் அனுமான்
தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகள் அனுமன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு சன்னதியில் மூன்று முறை வலம் வந்து வழிபட்டால் தவறான பாதைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. அறிந்து அறியாமல் கூட நிச்சயமாக யாருக்கும் கெடுதல் தரும் விஷயங்களை நீங்கள் செய்ய மாட்டீர்கள். செய்யவிடாமல் அனுமது உங்களைப் பார்த்துக் கொள்வார்.
பண கஷ்டம் தீர அனுமன் வழிபாடு
கடன் சுவை பணம் இல்லை வருமானத்திற்கு வழியில்லை என்று வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அனுமன் கோவிலுக்கு சென்று கிழக்கு பார்த்து அமர்ந்து அனுமன் சாலிசா படிக்க வேண்டும். மேலும் வீட்டிலிருந்தே வெள்ளை கொண்டை கடலையை வேக வைத்து நெய்வேதியமாக எடுத்துச் செல்ல வேண்டும். அனுமதி வழிபட்டு விட்டு நெய்வேத்தியத்தை கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும். இதனால் சொத்து சுகம் உங்களை தேடி வரும் பதவி புகழ் பணம் என எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். காரணம் இது மிகவும் எளிமையான நல்ல வழிபாடு. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த இரண்டு வழிபாட்டையும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமையில் செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடனை தீர்க்கும் கால பைரவரின் பரிகாரம்