செல்வ வளத்தை பெருக செய்யும் செம்பருத்தி பூ பரிகாரம்!!

வீண் விரைய செலவுகள் நம் வீட்டில் குறைந்து விட்டாலே கையில் வருமானம் தங்க ஆரம்பிக்கும். மருத்துவ செலவுகள் வீட்டில் வந்துவிட்டாலே வீட்டில் பண பிரச்சினைகள் ஏற்படும் வீட்டில் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியாரை எப்படியாவது வசியம் செய்து கொள்

By ·

வீண் விரைய செலவுகள் நம் வீட்டில் குறைந்து விட்டாலே கையில் வருமானம் தங்க ஆரம்பிக்கும். மருத்துவ செலவுகள் வீட்டில் வந்துவிட்டாலே வீட்டில் பண பிரச்சினைகள் ஏற்படும் வீட்டில் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியாரை எப்படியாவது வசியம் செய்து கொள்ள வேண்டும். பணக்கஷ்டம் இருக்கக் கூடாது என்றால் சுலபமாக நாம் ஒரு சில பரிகாரங்களை செய்ய வேண்டும். செம்பருத்தி பூவை வைத்து செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

சுப செலவுகள்

இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் இருக்கும் செல்வம் சிந்தாமல் சிதறாமல் பாதுகாப்பாக இருக்கும். சுப செலவுகள் மட்டுமே ஏற்படும். பணத்தை வைத்து நாம் மிகவும் உருப்படியாக ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். பணத்தை வைத்து சொத்து வாங்கலாம், நகை வாங்கலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம் இப்படி எல்லாம் பணம் செலவானால் மனக்கஷ்டம் வராது. அதைத் தவிர வேறு ஏதும் பிரச்சனைகள் வந்தால் நிச்சயமாக அந்த பிரச்சனைகளை இந்த பரிகாரம் சரி செய்யும்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு ஒரு கண்ணாடி டம்ளர், பச்சை கற்பூரம், மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, செம்பருத்தி பூ அனைத்தும் தேவைப்படும். முதலில் ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பும் அதில் பச்சை கற்பூரம் மஞ்சள் தூள் ஏலக்காய் பொடி போட்டு அதன் மேல் செம்பருத்தி பூ ஒன்றை வைக்க வேண்டும். பிறகு வலது கை சுண்டு விரலை அந்த தண்ணீருக்குள் வைத்து” ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை மனம் உருக 27 முறை உச்சரிக்க வேண்டும். இந்த கண்ணாடி டம்ளரை வீட்டில் ஈசானிய மூலையில் வைக்க வேண்டும். மறுநாள் அந்த தண்ணீரையும் பூவையும் மாற்றி ஈசானிய மூலையில் வைக்க வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய கால அளவு

இந்த பரிகாரத்தை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். வீட்டில் செய்யக் கூடிய இந்த எளிமையான பரிகாரத்தை சுத்த பத்தமாக செய்ய வேண்டும். வீட்டின் ஈசானிய மூலையையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : ஒற்றுமையை அதிகரிக்கும் உப்பு மிளகு பரிகாரம்

Recipes AMP · Quick view
View full