கனவில் கூட சொந்த வீடு வாங்க முடியாது என்பவர் கூட சொந்த வீடு வாங்க! 6 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்யுங்கள்!
என்னதான் பெரிய வீடுகளிலும், அப்பார்ட்மெண்ட்களிலும் வாடகைக்கு வசித்து வந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் இது நாம் சொந்த இடம் இல்லை என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். சிலர் வாழ்வில் நிலம் வாங்குவது வீடு கட்டுவது என்பதையை உயர்ந்த லட்சியமாக கொண்டு வாழ்வார்கள். அப்படி இரு
என்னதான் பெரிய வீடுகளிலும், அப்பார்ட்மெண்ட்களிலும் வாடகைக்கு வசித்து வந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் இது நாம் சொந்த இடம் இல்லை என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். சிலர் வாழ்வில் நிலம் வாங்குவது வீடு கட்டுவது என்பதையை உயர்ந்த லட்சியமாக கொண்டு வாழ்வார்கள். அப்படி இருப்பவர்கள் தன் லட்சியத்தை அடைவதற்காக வருடக் கணக்கில் சிறிதாக பணம் சேர்த்து அதன் பின் அவர்களது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் இதில் ஒன்றும் தவறு இல்லை இப்படி நீங்களும் வீடு கட்டுவதற்கு, நிலம் வாங்குவதற்கு என்று சிறுக சிறுக பணம் சேர்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அதோடு சேர்த்து இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள் உங்கள் கனவு, ஆசை, லட்சியம் என அனைத்தின் மொத்த உருவமாக நீங்கள் சீக்கிரமாகவே வீடோ நிலமும் வாங்கி விடலாம். அதனால் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
அம்மன் சூலம்
இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்வதற்கு உங்களுக்கு முதலில் தேவைப்படுவது அம்மன் கைகளில் இருக்கும் சூலம். அதே சூலம் இல்லம் அதேபோல் சிறிய அளவிலான எந்த உலகத்தினால் செய்யப்பட்ட சூழமாக இருந்தாலும் பரவாயில்லை ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். பின்பு இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். அதனால் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் பூஜை அறையை சுத்தப்படுத்தி தெய்வங்களுக்கு பூ சூட்டி அதன் பின் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து அதில் நாம் வாங்கி வைத்திருக்கும் சூலத்தை நிப்பாட்டி சூலத்திற்கும் மஞ்சள் குங்குமம் விட்டு பூ வைக்கவும்.
பூஜை செய்ய
அதன் பின்பு அந்த சூலத்தின் முன் அமர்ந்து மனதார உங்கள் குல தெய்வத்தை நினைத்துக் கொண்டு உங்கள் மனதில் வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என இது போன்ற உங்கள் பிரார்த்தனையை மனதில் வைத்து குறைந்தது ஒரு பத்து நிமிடங்கள் வரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின் தீப ஆராதனை செய்து உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்படி நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து முடித்த பின் சனிக்கிழமை தினத்தென்று நீங்கள் பச்சரிசியில் குத்தி வைத்திருந்த சூலத்தை பூஜை அறையில் எடுத்து வைத்துவிட்டு பச்சரிசியையும் வெல்லமும் கலந்த கலவையை எறும்புகளுக்கு உணவாக ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.
ஆறு வெள்ளிக்கிழமை
இப்படி தொடர்ந்து ஆறு வாரம் வெள்ளிக்கிழமைகள் பச்சரிசியை வெல்லம் கலந்த கலவையில் சூலத்தை குத்தி அதற்கு பூஜை செய்து வர வேண்டும் இடையில் ஏதாவது ஒரு வாரம் பூஜை செய்யாத சூழ்நிலை ஏற்பட்டும் பட்சத்தில் அந்த வாரத்தை விட்டுவிட்டு அடுத்த வாரத்தில் இருந்து கணக்கு வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். இப்படியாக ஆறு வாரங்கள் பூஜை செய்து முடித்த பின் நீங்கள் வைத்திருக்கும் அந்த சூலத்தை அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனிடம் உங்களது பிரார்த்தனையை கூறி அதை அம்மனுக்கு காணிக்கையாக உண்டியலில் சேர்த்து விடுங்கள். அவ்வளவுதான் உங்களுடைய வாழ்க்கையின் லட்சியமான வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற வேலைகளுக்கு இடையூறு இல்லாமல் உங்கள் வேலை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.