உங்கள் பண பிரச்சனை தீர வேண்டுமா ? அரச மரத்தடியில் அமர்ந்து இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

இந்த புவியில் வாழும் பெரும்பாலானோர் தங்கள் பிரச்சனையாக கருதுவது பணத்தை மட்டும் தான். அதை தாண்டி அவர்களிடம் அனைத்துமே இருக்கும் ஆனால் அவர்களிடம் இல்லாமல் இருப்பது பணம் மட்டுமாகவே இருக்கும். அவர்களும் எவ்வளவு உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் ஒட்டவே ஒட்டாது இதுபோன்ற வரவு எவ்வளவு வந்த

By ·

இந்த புவியில் வாழும் பெரும்பாலானோர் தங்கள் பிரச்சனையாக கருதுவது பணத்தை மட்டும் தான். அதை தாண்டி அவர்களிடம் அனைத்துமே இருக்கும் ஆனால் அவர்களிடம் இல்லாமல் இருப்பது பணம் மட்டுமாகவே இருக்கும். அவர்களும் எவ்வளவு உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் ஒட்டவே ஒட்டாது இதுபோன்ற வரவு எவ்வளவு வந்தாலும் செலவு ஒரு பக்கம் நீண்டு கொண்டே செல்லும் அவர்கள் எல்லாம் ஆஞ்சநேயரை வேண்டி கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சொன்னால் போதும் அவர்களின் பண பிரச்சனை சட்டென்று காணாமல் போய்விடும். அதனால் இதைப் பற்றி நாம் தெளிவாக இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

மந்திரம்

இதை நீங்கள் செய்வதற்கு வளர்பிறைவுடன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரின் சன்னதியின் முன் அமர்ந்து கொண்டு ” ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே ஆதி வராஹாய பஞ்சமுஹி ஹனுமதே லம்லம் லம்லம் ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா” இந்த மந்திரத்தை உங்கள் மனதுக்குள்ளையே சொல்லி வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பண பிரச்சினைகளும் தீர்ந்து போகும். உங்கள் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் இல்லை என்ற பட்சத்தில் வீட்டின் அருகே உள்ள அரச மரத்தடியில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

குறிப்பு

இந்த மந்திரத்தை உச்சரித்து நீங்கள் இப்படி வேண்டும்பொழுது குறிப்பாக அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இது போன்று ஆஞ்சநேயர் கோவில் அல்லது அரச மரம் அடியில் உட்கார்ந்து 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் உங்கள் பண பிரச்சனை மிக சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்

Recipes AMP · Quick view
View full