பணம் கட்டு கட்டாக உங்களிடம் வந்து சேர பணத்தில் இதை மட்டும் தடவி வைத்து விடுங்கள்!!
நம்மில் பலரும் பணத்தை சேர்ப்பதற்கு தான் ஓடிக்கொண்டே இருக்கிறோம். என்னதான் நாம் ஓடிக்கொண்டே இருந்தாலும் அந்த பணத்தை நம்மளால் சேர்க்க முடிவதில்லை. பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் எடுக்கும் எந்த முயற்சியும் நமக்கு பலனை அளிப்பதில்லை. அதற்கு நம்முடைய யோகமும் காரணமாக இருக்கலாம். இதற்கு தான
நம்மில் பலரும் பணத்தை சேர்ப்பதற்கு தான் ஓடிக்கொண்டே இருக்கிறோம். என்னதான் நாம் ஓடிக்கொண்டே இருந்தாலும் அந்த பணத்தை நம்மளால் சேர்க்க முடிவதில்லை. பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் எடுக்கும் எந்த முயற்சியும் நமக்கு பலனை அளிப்பதில்லை. அதற்கு நம்முடைய யோகமும் காரணமாக இருக்கலாம். இதற்கு தான் ஆன்மீகத்தில் ஒரு பரிகாரத்தை கூறியுள்ளார்கள். அது என்ன பரிகாரம் என்பதை பற்றியும், எப்படி செய்ய வேண்டும் என்பதனை பற்றியும் இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.
பணத்தை சம்பாதித்து சேமிப்பது எத்தனை பெரிய காரியம் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனாலும் சம்பாதித்த பணத்தை நாம் தேக்க கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பணமானது புழக்கத்தில் இருந்தால் தான் அது பெருகும். பலரும் பணத்தை கையில் வைத்து அப்படியே தேக்கி விடுகிறார்கள். இதனால் பணம் பெறுக வாய்ப்பு குறைவு. உங்களிடம் இருக்கும் பணத்தில் ஒரு ரூபாய் எனினும் நல்ல முறையில் நல்ல செலவுகளுக்கு செய்து பழகுங்கள் அந்த பணம் நிச்சயம் இரட்டிப்பாக உங்களிடம் வந்து சேரும்.
பணம் சேர பரிகாரம்
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிர ஹோரை அன்று தான் செய்ய வேண்டும். அல்லது அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக இருந்தால் செய்யலாம். இல்லை என்றால் வளர்பிறை திதி அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதா என்பதனை உறுதி செய்த பின்னர் தான் செய்ய வேண்டும்.
பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நம் வீட்டில் இருக்கும் லவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக வாங்கிய லவங்கப்பட்டை என்றால் எடுத்துக் கொள்ளலாம், அல்லது கடைகளுக்கு சென்று புதிதாக வாங்கி வந்து இதனை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் உள்புறம் வெளிப்புறம் என்று இரண்டு பக்கம் இருக்கும் அதில் உள்புறம் லேசாக அரஜகாவை தேய்த்த பிறகு இந்த லவங்க பட்டை பொடியை மேலே தூவி விட்டால் அது அப்படியே ஒட்டிக் கொள்ளும்.
இந்த நோட்டை நன்றாக மடித்து உங்கள் பரிசில் அல்லது பணம் புழங்கும் பீரோவில் ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும். குறிப்பாக இந்த பணத்தை எக்காரணத்திற்க் கொண்டும் செலவு செய்யக்கூடாது அதுதான் மிகவும் முக்கியம். இந்த பணம் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் பணவரவு வந்து கொண்டே இருக்கும். நாம் லவங்கப்பட்டையுடன் ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவை சுக்கிர வசியம் செய்யக்கூடிய பொருட்கள்.
சுக்கிர பகவானின் அனுகிரகம்
பணம் நாம் என்ன தான் சம்பாதித்து சேர்த்து வைத்தாலும் அதை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு சுக்கிரன் அனுகிரகம் தேவை. ஆகவே பண வரவிற்காக நாம் மகாலட்சுமி தாயாரை வேண்டினாலும் சுக்கிர பகவானின் அனுகிரகம் இருந்தால் தான் அதை நல்ல முறையில் நாம் அனுபவித்து பல மடங்கு பெருக்கிக் கொள்ள முடியும் ஆகவே இந்த பரிகாரத்தின் மூலம் இருவரின் அனுகிரகமும் கிடைத்து பணவரவு பல மடங்கு பெருகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பரிகார முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பணத்தை பல மடங்கு பெருக்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.