விநாயகர் சதுர்த்தி 2025, இந்த குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு விநாயகர் கூடுதல் பலன்களை அளிப்பார்!!
இந்து மதத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி என்று கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஆறு ராஜயோகங்கள் ஜோதிடத்தில் உருவாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வழிபாடு ம
இந்து மதத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி என்று கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஆறு ராஜயோகங்கள் ஜோதிடத்தில் உருவாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வழிபாடு மேற்கொண்டால் பக்தர்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். இந்த நாளின் அடிப்படையில் அனைத்து ராசிகளுக்கும் குடும்பத்தில் செழிப்பு, பணபலம் என அதிகமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும். இருப்பினும் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு விநாயகர் கூடுதல் பலன்களை அளிப்பார். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் காணலாம்.
மேஷம்
விநாயகருக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் மேஷமும் ஒன்று, செவ்வாய் பகவானுக்கு உகந்த ராசியும் மேஷம் தான். எனவே இந்த ராசிக்காரர்கள் தைரியமாக, அச்சமின்றி இருப்பார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நீங்கள் நினைக்கும் வேலைகள் விரைவாக நடக்கும். பணத்திற்கு பற்றாக்குறையே வராது. வாழ்க்கையில் வளமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் தொழில், வியாபாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடிவரும்.
மிதுனம்
புதன் கிரகம் இந்த ராசிக்கு உகந்ததாகும். விநாயகரின் அருளும் இவர்களுக்கு கிடைக்கும். பணியில் இவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். சமுதாயத்திலும், பணியிடத்திலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலிலும் லாபம் அதிகரிக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சார்ந்த விஷயத்தில் நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் சிறப்பான பலனை பெறலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானின் உகந்த ராசி விருச்சிகம் ஆகும், எனவே இவர் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் பிரச்னையில் சிக்கும்போதெல்லாம் விநாயகர் பாதுகாப்பு அரணமாக இருந்து உதவுவார். நீங்கள் முடிக்க நினைத்த முக்கிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சு, செயலில் நிதானம் ஏற்படும். கடினமான சூழலை எளிதாக கடக்க முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். புதிய வாகனம் வாங்கும் கனவு நினைவாகும். மாணவர்கள் படிப்பில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மகரம்
சனி பகவானுக்கு உகந்த ராசி இதுதான். விநாயகர் மற்றும் சனி பகவானின் அருள் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்னைகள் வரும், ஆனாலும் கணபதியின் அருளால் செல்வம், புகழ், செழிப்பு ஆகியவை உங்களை தேடி வரும். வாழ்க்கையில் நிதி நெருக்கடிகள் அதிகம் ஏற்படுவதில்லை. குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரலாம். எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கலாம்.
கும்பம்
சனி பகவானுக்கு உகந்த ராசி கும்பம். இவர்களுக்கும் விநாயகர் மற்றும் சனி பகவானின் அருள் கிடைக்கும். வெற்றி, செல்வம் அனைத்தும் உங்களை தேடி வரும், இளம் வயதிலேயே வேலையில் நல்ல இடத்திற்கு போவீர்கள். தொழிலில் பெரிய வெற்றிகளை அடைய முடியும். வணிகத்தில் சிறப்பாக சம்பாதிக்க முடியும். வீடு, நிலம், சொத்து வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் முதலீடுகள் செய்வீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் சரியாகிவிடும். பிள்ளைகளை பற்றிய கவலைக்கு ஒரு நல்ல முடிவை பெறுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : ஆவணி மாத பலன்கள் 2025