உங்கள் கடன் பிரச்சனை தீர கால அவகாசம் தேவைப்படுகிறதா ? 6 ஞாயிற்று கிழமை இதை செய்யுங்கள்!

இந்த உலகில் வாழும் ஒரு மனிதர் கடன் கூட வாங்காமல் வாழ முடியாது எப்போதும் ஒருவர் இன்னொருவருக்கு கடன் பட்டு தான் இருப்பார்கள். அது பணமாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் சரி. அப்படி நம் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருப்பதற்கு இன்று நாம் கடனாக வாங்கிய பணத்தை சிறிது நாட்களில் நாம் திருப

By ·

இந்த உலகில் வாழும் ஒரு மனிதர் கடன் கூட வாங்காமல் வாழ முடியாது எப்போதும் ஒருவர் இன்னொருவருக்கு கடன் பட்டு தான் இருப்பார்கள். அது பணமாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் சரி. அப்படி நம் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருப்பதற்கு இன்று நாம் கடனாக வாங்கிய பணத்தை சிறிது நாட்களில் நாம் திருப்பி கொடுத்துவிடுவோம் இப்படி தான் பலரும் தங்கள் வாழ்க்கையை சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் இப்படித்தான் கடன் வாங்குவார்கள் ஆனால் அவர்களது நேரமா என்னமோ அந்த கடனை கட்ட முடியாமல் கடன் மேல் கடன் பிரச்சனையில் சிக்கி பாடப் படுவார்கள். கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பி கொடு என்று கழுத்தை இறுக்கி பிடிப்பார்கள்.

ஆனால் நம்மிடம் ஏற்கனவே பணம் இல்லாமல் தான் இந்த கடனை வாங்கி இருப்போம். ஏதாவது நகையை அடமானத்தை வைத்து பணம் கொடுக்கலாம் என்று பார்த்தால் நம்மிடம் தங்கமும் இருக்காது. இருந்த தங்கமும் ஏற்கனவே அடமானத்தில் இருக்கும். நமக்கு கடனை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும் ஆனால் அதற்கு சிறிது கால அவகாசல் தேவைப்படும் என்று நினைப்பவர்கள் எல்லாம் தாராளமாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதனால் இன்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் உங்கள் கடன் பிரச்சனையை தீர்க்க கூடிய சக்தி வாய்ந்த பரிதாபத்தை பற்றி தான் காண உள்ளோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பரிகாரம்

நாம் என்னதான் கடன் பிரச்சனையில் மூழ்கியிருந்தாலும் நமக்கு அந்த கடன் பிரச்சனையை முடிப்பதற்கு தேவையானது பணமும் நகையும் அல்ல சிறிது கால அவகாசம் கொடுத்தாலே போதும். நாம் அந்த கடனை முழுவதுமாக அடைத்து விடுவோம். அதனால் கடன் கொடுத்தவரே கடனை இப்போதே திருப்பி கொடு என்று கேட்காமல் உங்களுக்கு கால அவகாசம் கொடுத்து இப்போது திருப்பி கொடு என்று சொல்வதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை வீட்டில் உள்ள கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் செய்தால் போதுமானதாக இருக்கும். ஆனால் ஆறு வாரம் ஞாயிற்றுக்கிழமைகள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் ஒரு வாரம் கூட செய்யாமல் இருக்கக் கூடாது. மேலும் இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.

அரச இலை

இந்த பரிகாரத்தை செய்வதற்கு உங்களுக்கு அரச மர இலை தேவைப்படும் முந்தைய நாளே மரத்திலிருந்து இலையை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு உங்களது பூஜை அறையில் எப்பொழுதும் போல் பூஜை செய்வதற்கு தயார்படுத்திக் கொண்டு விளக்கு ஏற்றிவிட்டு அந்த அரச இலையில் யாருக்கு உங்களுக்கு பணம் நெருக்கடி கொடுக்கிறாரோ அவரின் பெயரை எழுதி அந்த அரச இலையே சுருட்டி மெல்லிய நூலால் கட்டிக் கொண்டு. உங்கள் குலதெய்வத்தின் முன்பு வைத்து விடுங்கள். பின் உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து குலதெய்வத்திடம் இப்போதைக்கு மிகவும் பண நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. இவர் கொடுக்கும் பணம் நெருக்கடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆறு வாரம் முடிந்த பின்பு

குலதெய்வத்தை நாம் மனம் உருகி பிரார்த்தனை செய்த பின் நீங்கள் பெயர் எழுதிய வைத்து இருக்கும் அந்த இலையை ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். பின் குலதெய்வத்திற்கும் அந்த இலைக்கும் கற்பூர ஆராதனை காமித்து பூஜை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்படி இலையில் பணம் நெருக்கடி கொடுப்பவரின் பெயரை எழுதி பூஜை செய்யும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு மாதங்கள் விடாமல் செய்து கொண்டு வாருங்கள். ஆறு வாரம் முடிந்ததும் ஆறு இலைகள் சேர்ந்திருக்கும் அந்த இலைகளை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஓடும் நீர்நிலைகள், குளம், கிணறு என உங்களுக்கு சௌகரியமான இடத்தில் போட்டு விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் வாங்கிய கடனுக்காக நெருக்கடி கொடுப்பவரிடம் இருந்து உங்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க கால அவகாசம் கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full