உங்கள் கடன் முழுவதும் தீர இந்த நாளில் உங்கள் கடன் பணத்தை திருப்பி கொடுங்கள்! கடன் பிரச்சனை தீரும்!

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். கடன் வாங்க

By ·

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர்.

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

கடனை திருப்பி அடைக்க வேண்டிய நாட்கள்

பொதுவாக கடன் வாங்க கூடாது நாட்கள் என்று சில நாட்கள் உள்ளன. ஆனால் நமக்கு அவசர தேவை என்று வரும்பொழுது நாம் அதனை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. நமக்கு எப்பொழுது தேவை வருகிறதோ அப்பொழுது நாம் கடனை வாங்கி விடுகிறோம். இப்படி நாள், கிழமை என்று பாராமல் நாம் கடன் வாங்குவதும் நம்மளால் கடனை திரும்ப அடைக்க முடியாததற்கு ஒரு காரணமாகும். பொதுவாக குளிகை நேரத்தில் கடன் வாங்க கூடாது என்று சொல்வார்கள் அதுமட்டுமல்லாமல், சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் கடன் வாங்க கூடாது என்று சொல்வார்கள்.

இந்த கிழமையை பயண்படுத்தி கொள்ளுங்கள்

அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை4 கடனை அடைக்கலாம். பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் எந்த பொருளையும் வீட்டில் இருந்து கொடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அப்படி இல்லை நாம் மற்ற பொருள்களை தான் நமது வீட்டில் இருந்து கொடுக்கக் கூடாது, ஆனால் அந்த கிழமையை நாம் கடன் அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த கிழமையில் கடன் வாங்க கூடாது என்று சொல்கிறார்களோ அந்த கிழமையில் நாம் கடன் அடைக்கும் பொழுது, நமக்கு இருக்கும் கடன் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து கடன் வாங்கும் நிலைமையே நமக்கு வராதாம்.

செவ்வாய்கிழமை பரிகாரம்

கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை. இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஹோரை வருகிறது. உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். தீபமேற்றிவிட்டு பின்னர் நாம் கடன் அடைக்கும் தொகையில் பாதியை எடுத்து தெய்வத்தின் முன் வைத்து எனக்கு இருக்கும் கடன் எல்லாம் அடைந்து விட வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கடன் தொகையை கடன் கொடுத்தவரிடம் கொடுத்து விட வேண்டும். இப்படி செய்வதினால் நமக்கு இருக்கும் கடன் தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

இந்த இரண்டு நாட்களையும் நாம் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டால் எவ்வளவு பெரிய தொகையாக கடன் இருந்தாலும் அதனை எளிமையாக நம்மால் அடைத்து விட இயலும். எனவே உங்களுக்கு இப்பதிவின் மேல் நம்பிக்கை இருந்தால் நீங்களும் ஹோரை தினங்களை பயன்படுத்தி கடன் அடைத்து கடனில்லா வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.

Recipes AMP · Quick view
View full