தீராத கடன் பிரச்சனை கூட குறுகிய நேரத்தில் தீர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!
ஒரு மனிதனின் முக்கியமான செல்வம் என்னவென்று தெரியுமா அது அவனின் உடல் ஆரோக்கியத்தை குறிப்பதாகும் இதுவே ஒரு மனிதனின் முதன்மையான செல்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு அப்புறம் தான் பணம், சொத்துக்கள், ஐஸ்வர்யங்கள் வரும். ஆனால் ஒரு மனிதனுக்கு அதிகப்படியான பிரச்சினையை தருவத
ஒரு மனிதனின் முக்கியமான செல்வம் என்னவென்று தெரியுமா அது அவனின் உடல் ஆரோக்கியத்தை குறிப்பதாகும் இதுவே ஒரு மனிதனின் முதன்மையான செல்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு அப்புறம் தான் பணம், சொத்துக்கள், ஐஸ்வர்யங்கள் வரும். ஆனால் ஒரு மனிதனுக்கு அதிகப்படியான பிரச்சினையை தருவது உடல் ஆரோக்கியமும், தீராத கடன் பிரச்சனையும் தான். உடல் ஆரோக்கியத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும் அதுபோல் பணத்தை நம்மால் எவ்வளவு திருப்பி செலுத்த இயலுமா அவ்வளவு தான் கடன் வாங்க வேண்டும்.
அதனால் நமக்கு ஏற்படும் தீராத கடன் மற்றும் நோய்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாம் அதை தடுக்க நாம் எடுக்கும் முயற்சிகளுடன் சிறிது ஆன்மிகத்தையும் சேர்த்து செய்வதன் மூலம் நம்மளுடைய பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். ஆம் அதிகமாக கடன் வாங்கி வைத்துக்கொண்டு அதைக் கட்ட முடியாதவர்களுக்கும் வீட்டில் உள்ளவர்கள் நோய் நொடியால் அவதிபட்டு கொண்டிருப்பதை பார்த்து மனம் வருந்துபவர்களும் நாள் நட்சத்திரம் பார்த்து சரியான கிழமைகளில் பூஜை பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம் அதைப்பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம்.
ஒருவரிடம் கடன் வாங்கும் பொழுது ஹஸ்தம் நட்சத்திரத்தில் அவர்களிடம் எப்பொழுதும் கடன் வாங்க கூடாது, கடனை திரும்ப செலுத்தவும் கூடாது. அப்படி நாம் கடன் வாங்கும் பட்சத்தில் அந்த கடன் மேலும் மேலும் வளர்ந்து பெருகி நாம் அடைக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கடன் சுமையாக மாறிவிடும் ஆகையால் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.
உங்களுக்கு இருக்கும் கடன் சிறியதாக இருந்தாலும் சரி பெரிய அளவிலான கடனாக இருந்தாலும் சரி. கடனை திரும்ப அடைப்பதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக இருக்கும். செவ்வாய்க்கிழமை தினத்தன்று செவ்வாய் ஓரையில் நீங்க வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் பொழுது கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் அதேபோல் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஓரையில் தீராத நோய் உள்ளவர்கள் வைத்தியம் பார்த்தால் கூட நோய்கள் தீர்ந்துவிடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அது போல குடும்பத்தகரார்கள், சொத்து தகராறுகள் போன்றவற்றின் மூலமாக வருட கணக்கில் நிலவையில் உள்ள வழக்குகள் கூட இவ்வாறு நாம் செய்வதன் மூலம் ஒரு முடிவுக்கு வரும். அதனால் தாரளமாக இதை செய்து பாருங்கள்.