வாங்கிய மொத்த கடனையும் ஒரே மாதத்தில் திருப்பி கொடுக்க ஒரு சொம்பு தண்ணீர் போதும்!

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற ஒன்றுதான். என்னதான் நாம் சிக்கனமாக வாழ்ந்தாலும் மருந்து செலவுகள் என வரும் பொழுது பணம் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனால் குடும்பம் நடத்துவதற்கு பணம் இல்லாமல் நாம் கடன் வாங்கும்

By ·

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற ஒன்றுதான். என்னதான் நாம் சிக்கனமாக வாழ்ந்தாலும் மருந்து செலவுகள் என வரும் பொழுது பணம் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனால் குடும்பம் நடத்துவதற்கு பணம் இல்லாமல் நாம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இப்படித்தான் பலரும் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். ஒரு சொம்பு தண்ணீரால் நம்முடைய கடன் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க முடியுமா. நம்பிக்கை தாங்க வாழ்க்கை. நம்பிக்கை இல்லை என்றால் பரிகாரம் நிச்சயம் பலிக்காது. அதேபோல பரிகாரத்தை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு, நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர்களா அல்லது தேய்பிறையில் பிறந்தவர்களா என்பதையும் தெரிஞ்சி வச்சிக்கோங்க அது ரொம்ப முக்கியம்.

எவ்வளவு பெரிய கடன் சுமையாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் அல்லாமல் வேறு ஏதாவது மன கஷ்டம், பணக்கஷ்டம் உங்களுக்கு இருக்குது என்றாலும் சரி, அதை சரி செய்ய இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கோடி கடனையும் அடைக்க தண்ணீர் பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு தண்ணீர் தேவை அல்லவா! அதனால் இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னால் ஒரு செம்பு நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த செம்பு தண்ணீரை உங்கள் குல தெய்வத்தை நினைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.

குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த சொம்பை உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். எனக்கு இருக்கும் கடன் அனைத்தும் இந்த தண்ணீரில் அடுத்து சொல்ல வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். காலையில் கண்விழித்ததும் உங்கள் காலை கடனை முடித்து பின் குளிக்க செல்வீர்கள்.

குளிக்கும் தண்ணீர்

நீங்கள் குளிக்கும் செல்லும் முன்னர் பூஜை அறையில் வைத்த தண்ணீரை நீங்கள் குளிக்க எடுத்து இருக்கும் தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தாராளமாக குளிக்கலாம். குளிப்பதற்கு முன்னர் ஒரு சூட்சமம் அடங்கியுள்ளது. அதாவது நீங்கள் தேய்பிறையில் பிறந்தவர்களா அல்லது வளர்பிறையில் பிறந்தவர்களா என்று! நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர்கள் என்றால் இந்த தண்ணீரை வலது பக்க தோள்பட்டையில் இருந்து கீழ்நோக்கி ஊத்தவும். நீங்கள் தேய்பிறையில் பிறந்தவர்கள் என்றால் இந்த தண்ணீரை இடது பக்க தோள்பட்டையில் இருந்து கீழ் நோக்கி ஊத்தவும்.

இப்படி தண்ணீரை உங்கள் மேல் ஊற்றும் போது உங்கள் கடன் சுமையெல்லாம் உங்களை விட்டு அந்த தண்ணீரில், உடம்பு வழியாக அப்படியே கீழே இறங்கிவிட்டது என்று மனதார நினைக்க வேண்டும். நிச்சயமாக முழு நம்பிக்கையோடு மூன்று நாள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் கடன் சுமை குறைவதற்கு ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சமும், உங்கள் வீட்டு தெய்வமும் காட்டிக் கொடுக்கும். நம்பிக்கை இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கொடுக்காது. கடன் சுமை கொண்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

Recipes AMP · Quick view
View full