கஷ்டங்களை நீக்கும் கால பைரவர் வழிபாடு!!
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கும். கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு கஷ்டம் வந்து நம்மை மேலும் கஷ்டப்படுத்தும். ஒரு சிலருக்கு எந்த திசை நோக்கி திரும்பினாலும் கஷ்டம் இருக்கும் அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்திலும் பிரச்சனைக்கு மேல் பிரச்ச
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கும். கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு கஷ்டம் வந்து நம்மை மேலும் கஷ்டப்படுத்தும். ஒரு சிலருக்கு எந்த திசை நோக்கி திரும்பினாலும் கஷ்டம் இருக்கும் அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்திலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வரும். தொழிலிலும் பிரச்சனைகள் வரும் குழந்தைகள் ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் பல விதங்களில் பல கஷ்டங்கள் இருக்கும். இந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்வதற்கு கால பைரவரை வழிபாடு செய்தால் மிகவும் நல்லது அதனை பற்றி பார்க்கலாம்.
காலபைரவர்
காலத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடியவர் கால பைரவர். கர்ம வினைகளின் அடிப்படையில் பலன்களை தரக்கூடியவர் சனி பகவான். அப்படிப்பட்ட சனி பகவானுக்கு குருவாக திகழக்கூடியவர்தான் காலபைரவர். காலபைரவரை நாம் முழுமனதோடு வழிபட்டு வந்தால் சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட கஷ்டங்கள் மட்டும் தீராது வேறு எந்த கிரகத்தாலும் எந்த காலத்தினாலும் நமக்கு ஏற்பட்ட கஷ்டம் அனைத்தும் தீரும். அப்படிப்பட்ட கால பைரவரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்க்கலாம்.
மிகவும் கஷ்டத்தில் இருப்பவர்களும் செய்ய வேண்டிய வழிபாடு
தீராத கஷ்டத்தால் பாதிக்கப்பட்டு வாழவே முடியாமல் இருப்பவர்கள் கூட இந்த வழிபாட்டை செய்து வந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்து கொண்டே வரும் பொழுது அவர்களின் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான வாய்ப்புகளும் வரும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஒன்று தான் செய்ய வேண்டும் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு கால பைரவர் சன்னதியில் இதனை செய்ய வேண்டும்.
வழிபாடு செய்யும் முறை
சிவாலயத்திற்கு செல்லும் போது எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொண்டு போக வேண்டும். அங்கு இருக்கக்கூடிய காலபைரவருடைய சன்னதியில் காலபைரவர் உடைய பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வைத்து இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி சிவப்பு நிற மலர்களை வாங்கி வைத்து காலபைரவரை வழிபாடு செய்யலாம் நெய்வேதியமாக தயிர்சாதத்தை வைக்க வேண்டும். உங்களால் முடிந்த அளவிற்கு உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பிறகு காலபைரவரை 11 முறை வலம் வந்து காலபைரவருடைய பாதத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம்பழத்தை மறுபடியும் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு வந்து ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் முட்டையாக கட்டி வீட்டு நிலை வாசலில் கட்டி விட வேண்டும்.
பரிகாரத்தின் பலன்கள்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலபைரவர் சன்னதிக்கு சென்று எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து புதிதாக நிலை வாசலை கட்டி விட்டு பழைய எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்தில் போட வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட தீய சக்தியும் போய்விடும். எப்பேர்ப்பட்ட கிரக தோஷங்களும் நீங்கிவிடும் முழு மனதோடு காலபைரவரை இந்த முறையில் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்து பாருங்கள் நிச்சயமாக வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
இதனையும் படியுங்கள் : கடனை தீர்க்கும் கால பைரவரின் பரிகாரம்