கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கக்கூடிய காலபைரவர் வழிபாடு!!

முக்காலங்களையும் காலபைரவர் உணர்ந்தவர். கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும். கால பைரவர் அனைத்து காலங்களிலும் தேவராக விளங்க கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை முழு மனதோடு வழிபாடு செய்யும்போது அவருடைய அருளால் நம்முடைய வாழ்க்கை இனி ஏற்பட்ட அன

By ·

முக்காலங்களையும் காலபைரவர் உணர்ந்தவர். கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும். கால பைரவர் அனைத்து காலங்களிலும் தேவராக விளங்க கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை முழு மனதோடு வழிபாடு செய்யும்போது அவருடைய அருளால் நம்முடைய வாழ்க்கை இனி ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தோஷங்களும் நீங்கிவிடும். படிப்படியாக கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வாழ்க்கை அமையும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

சனீஸ்வர பகவானின் குரு

நவகிரகங்களில் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் அதிகப்படியான கஷ்டங்களை தரக்கூடியவர் சனீஸ்வர பகவான். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானுக்கே குருவாக திகழக்கூடியவர்தான் காலபைரவர். காலபைரவரை வழிபாடு செய்யும் பொழுது சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பாவ கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு கேது போன்ற கிரகங்களின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம். காலபைரவரின் வழிபாடு மிகவும் சிறப்பான ஒன்று. நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று காலபைரவரை வழிபாடு செய்வது சிறப்பானது.

காலபைரவரை வழிபடக்கூடிய நேரம்

ராகு காலத்தில் கால பைரவரை வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்வது இன்னும் சிறப்பானது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை கால பைரவர் உடைய சன்னதிக்கு சென்று இரண்டாக விளக்கு ஏற்று வைத்து வெற்றிலை பாக்கு வாழைப்பழம் தேங்காய் செவ்வரளிப் பூ அனைத்தையும் வாங்கி கொடுத்து பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் இதனை செய்து முடித்த பிறகு பத்தாவது வாரம் நம்மால் முயன்ற அளவிற்கு அபிஷேகத்திற்கான பொருட்களையும் வஸ்திரத்தையும் காலபைரவருக்கு வாங்கி கொடுத்து தயிர் சாதத்தை நிவீதமாக படைத்து அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அதனை பிரசாதமாக கொடுக்க வேண்டும் தயிர் சாதத்தில் மாதுளம் பழம் சேர்த்து கொடுப்பது இன்னும் சிறப்பானது. கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு நிச்சயமாக இந்த ஒரு வழிபாட்டை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்தியை விரட்ட வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full