எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற இந்த வேல் வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்!!

வாழ்க்கை என்பது ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பயணம் ஆகும். இந்த பயணத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது தமக்கு சாதகமான நிலையும், செய்யும் காரியங்களில் வெற்றியுமே. வாழ்க்கையிலும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்கும். ஆனால் கா

By ·

வாழ்க்கை என்பது ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பயணம் ஆகும். இந்த பயணத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது தமக்கு சாதகமான நிலையும், செய்யும் காரியங்களில் வெற்றியுமே. வாழ்க்கையிலும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்கும். ஆனால் காரியங்களில் வெற்றி ஏற்படாமல் தடைகள் வந்து கொண்டு இருந்தாலோ, கைக்கு பக்கத்தில் வந்த பிறகு அந்த காரியம் கைநழுவி சென்றுவிட்டாலோ நம்முடைய மனம் மிகவும் வருத்தப்படும். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், எத்தனை பிரார்த்தனை, பரிகாரங்கள் செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லாமல் இருக்கிறது என வருத்தப்படுபவர்கள் தான் அதிகம். இப்படி வருத்தப்படுபவர்கள் என்ன வழிபாடு செய்தால் நல்லது அந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம். 

எடுத்த காரியத்தில் வெற்றி பெற வழிபாடு 

நாம் செய்யும் செயல்கள் யாவும் வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். ஆனால் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்யும் பொழுது ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தடைப்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் நின்றுவிடும். தினமும் கடவுளை வழிபடுகிறோம். இஷ்ட தெய்வ வழிபாடு உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளை செய்தாலும், எதுவும் நடக்கவே மாட்டேங்கிறது. வாழ்வில் எந்த மாற்றமும் வரவில்லை என்பவர்கள் இந்த முறையை பின்பற்றி முருகனின் கையில் இருக்கக்கூடிய வேலை வழிபட்டால் நிச்சயமாக வேண்டுதல்கள் நிறைவேறும்.

அனைத்து காரியத்திலும் வெற்றி தரும் முருகர் வழிபாடு

முருகப் பெருமானை கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் என ஆன்மிக உலகம் கொண்டாடுகிறது. முருகனின் பாதங்களை சரணடைந்தால் தீராத வினைகளும் தீர்ந்து, பலவிதமான நன்மைகள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். தற்போது கலியுக கடவுளாக போற்றப்படும் கந்தக் கடவுளை வழிபடுபவர்கள் பலரும் வீட்டில் வேல் வாங்கி வைத்து வழிபடும் வழக்கத்தை தற்போது கடைபிடித்து வருகின்றனர். எந்த ஒரு காரியத்தை  செய்தாலும் அதில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பவர்கள் காரியத்தை தொடங்குவதற்கு முன் வேல் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

வழிபாட்டு முறை 

இந்த வழிபாட்டை செய்வதற்கு பூஜையறையில் உள்ள முருகன் படத்தை நன்கு துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளவும். வீட்டில் வேல் இல்லாதவர்கள் முருகனின் படத்தில் இருக்கும் வேலை வழிபடலாம்.  முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு ஒன்று அல்லது ஆறு நெய் தீபத்தை ஏற்றி, முருகனுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவை நெய்வேத்தியமாக படைத்து “முருகா” என்ற திருநாமத்தை 108 முறை கூற வேண்டும். ஒவ்வொரு முறை முருகனின் நாமத்தை கூறும் போது இவ்வாறு முருகனின் கையில் இருக்கக்கூடிய வேலின் அடியில் ஒரு சந்தன குங்குமம் வைக்க வேண்டும். இப்படி நாம் வழிபடுவதன் மூலம் நாம் நினைத்த காரியம் விரைவிலேயே வெற்றிகரமாக நடைபெறும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து தொடங்க வேண்டும்.‌ இந்த வேல் வழிபாட்டை செய்தால் முருகனுடைய அருள் மட்டுமல்லாமல் சிவன், பார்வதி, முருகன் மூவரையும் வணங்கிய பலனும் கிடைக்கும் மூவருடைய ஆசியும் கிடைக்கும் அதனால் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். 

இதனையும் படியுங்கள் : வெற்றிகளை குவிக்க செய்யும் முருகன் மந்திரம் ‌

Recipes AMP · Quick view
View full