காரிய வெற்றி உண்டாக செய்ய வேண்டிய அட்சதை பரிகாரம்!!
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை எடுத்து வருவோம். அப்படி முயற்சிகளை எடுக்கும் பொழுது குருபகவானின் அருள் இருந்தால் நிச்சயமாக காரிய வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியான காரியங்களாக இருந்தாலும் வேலை ரீதியான காரியங்களாக இருந்த
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை எடுத்து வருவோம். அப்படி முயற்சிகளை எடுக்கும் பொழுது குருபகவானின் அருள் இருந்தால் நிச்சயமாக காரிய வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியான காரியங்களாக இருந்தாலும் வேலை ரீதியான காரியங்களாக இருந்தாலும் அனைத்திற்குமே குரு பகவானுடைய அருள் நிச்சயமாக தேவைப்படும். குரு பகவான் உடைய அருளை பெறுவதற்கு இந்த அட்சதை பரிகாரத்தை செய்து பாருங்கள். அதனை செய்வதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான்
குரு பார்க்க கோடி நன்மை என்ற ஒரு வாசகம் உள்ளது. குரு பகவான் உடைய அருள் நமக்கு இருந்தால் வாழ்க்கையில் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் சுப காரியங்களும் நடக்கும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்காது. அப்படி இருக்கும் போது குரு பகவானின் அருள் இருந்தால் நிச்சயமாக காரியம் கைகூடி வரும். ஒரு சிலர் ஜாதக ரீதியாக ஆராய்ந்து பிறகு ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் பொருள் அட்சதை அதனை அரிசி கொண்டு தயார் செய்து கொள்ளலாம். பச்சரிசியில் மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து அட்சதை தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாரை குருவாக நினைத்து மரியாதை கொடுக்கிறீர்களோ அவர்களிடம் சென்று அந்த மஞ்சுளா அரிசியை கொடுக்க வேண்டும். உயிரோடு இருப்பவர்களை குருவாக நினைத்தால் அவர்களிடம் அந்த மஞ்சள் அட்சதையை கொடுத்து திரும்ப வாங்கி வந்து ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி முட்டையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இறந்து போனவர்களை நீங்கள் குருவாக நினைத்தால் அவர்களுடைய சமாதியில் வைத்து வழிபாடு செய்து பிறகு கையில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களை தெய்வங்களை குருவாக நினைத்து வழிபாடு செய்பவர்களாக இருந்தால் அந்த சித்தருடைய ஜீவ சமாதிக்கு சென்று அந்த மஞ்சள் நிற மூட்டையை வைத்து வழிபாடு செய்து உங்கள் கைகளில் வைத்து கொள்ளலாம் எப்படி செய்வதன் மூலம் குரு பகவான் உடைய அருளை பரிபூரணமாக பெற முடியும். காரிய வெற்றியும் உண்டாகும். அன்னை தந்தை இருவருக்கும் அடுத்தபடியாக உள்ள குருவிற்கு இந்த வழிபாட்டை செய்து குரு பகவானுடைய அருளை முழுவதுமாக பெற்றுக்கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : பணவரவை அதிகரிக்கும் இளநீர் பரிகாரம்!