வீட்டில் இருக்கும் கொஞ்சம் பணமும் அதிகளவில் பெருகி கொண்டே இருக்க உங்களிடம் கசாகசா இருந்தால் போதும்!

இந்த உலகில் நாம் அனைவரும் வாழ்வது பணத்தினால் மட்டுமே. பணம் இல்லாமல் இங்கு வாழவே முடியாது. ஒரு சிலர் எதை தொட்டாலும் அவர்களுக்கு பணம் அதிகமாக வந்து சேரும் ஆனால் ஒரு சிலருக்கும் எதைத் தொட்டாலும் அதன் மூலம் பணம் நஷ்டம் மட்டுமே அடையும். நாம் எதை தொட்டாலும் பணம் அதிகமாக நமக்கு வந்து சே

By ·

இந்த உலகில் நாம் அனைவரும் வாழ்வது பணத்தினால் மட்டுமே. பணம் இல்லாமல் இங்கு வாழவே முடியாது. ஒரு சிலர் எதை தொட்டாலும் அவர்களுக்கு பணம் அதிகமாக வந்து சேரும் ஆனால் ஒரு சிலருக்கும் எதைத் தொட்டாலும் அதன் மூலம் பணம் நஷ்டம் மட்டுமே அடையும். நாம் எதை தொட்டாலும் பணம் அதிகமாக நமக்கு வந்து சேர நம் வீட்டில் எப்பொழுதுமே பூஜை அறையில் விளக்கு ஏற்றி தெய்வத்தை வணங்க வேண்டும். அப்படி ஒரு சிலர் எதைத் தொட்டாலும் அவர்களுக்கு பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

ஒரு லட்சம் முதலீடு போட்டு பல லட்ச ரூபாயை எடுப்பார்கள். அவர்கள் மேல் அதிர்ஷ்டம் பட்டு அவர்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அதன் மூலம் பணம் கொட்ட தொடங்கி விடும். ஆனால் ஒரு சிலருக்கு அவர்கள் கடினமாக உழைத்தால் கூட அதற்கான பலன் வந்து சேரவே சேராது. அனைவரும் எதைத் தொட்டாலும் பணம் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்க வீட்டில் இந்த எளிமையான கசகசா பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நீங்கள் தொடும் அனைத்து காரியங்களும் வெற்றி அடைந்து உங்களுக்கு பணம் கணக்கில்லாமல் வந்து கொண்டே இருக்கும். அந்த எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

நம் எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு சமையலறை பொருள் தான் கசகசா. இந்த கசகசாவை வைத்து தான் நாம் இந்த எளிமையான பரிகாரத்தை செய்யப் போகிறோம். இந்த கசகசா வசீகரத் தன்மை கொண்ட ஒரு சமையலறை பொருள். முதலில் ஒரு மண் அகல் விளக்கை எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு அந்த விளக்கில் ஊற்றிய எண்ணெயில் சிறிதளவு கசகசாவை தூவி விட வேண்டும். பிறகு அந்த விளக்கை ஏற்றிக் கொள்ளவும்.

இந்த கசகசா விளக்கை உங்கள் பூஜை அறையிலும் ஏற்றலாம் அல்லது பூஜை அறைக்கு வெளியில் உங்களுக்கு எந்த இடத்தில் ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அந்த இடத்திலும் ஏற்றலாம். தினமும் ஒரு மணி நேரம் இந்த கசகசா விளக்கை உங்கள் வீட்டில் ஏற்றி வைத்தால் பணவசியம் மிக விரைவிலேயே ஏற்படும். தினமும் உங்கள் வீட்டில் இந்த விளக்கு பிரகாசமாக இருந்தால் உங்கள் வாழ்க்கையும் பிரகாசமாக மாறி பணம் அதிக அளவில் வந்து உங்களிடம் சேரும்.

ஒரு மணி நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் போதும்

நீங்கள் ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்திலோ அரசு வேலையிலோ இருந்தால் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் ஏதாவது ஒரு தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு அந்த தொழிலில் இருந்து பல லட்சம் ரூபாய் கிடைக்கும். கணக்கில்லாத அளவிற்கு உங்கள் கைக்கு பணம் வந்து சேர தினமும் ஒரு மணி நேரம் இந்த விளக்கை உங்கள் வீட்டில் ஏற்றி வைக்கலாம்

48 நாட்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் இந்த கசகசா விளக்கை ஏற்ற வேண்டும். ஒருநாள் பயன்படுத்துவது என்னை கசகசா திரி அனைத்தையும் மறுநாள் பயன்படுத்தக் கூடாது. தினமும் முதல் நாள் ஏற்றிய விளக்கில் உள்ள எண்ணெய் திரி கசகசா அனைத்தையும் எடுத்து போட்டுவிட்டு புதிதாக அனைத்தையும் மாற்றி தினமும் விளக்கு ஏற்ற வேண்டும்.

இந்த விளக்கை நீங்கள் ஏற்ற தொடங்கிய முதல் நாளிலிருந்து மாற்றங்கள் தெரியும் தொழில் பிரச்சனைகள் கடன் பிரச்சினைகள் என அனைத்துமே நீங்கிவிடும். 48 நாட்களுக்கு தினமும் இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்திடம் மனம் உருக பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயமாக நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உங்களுக்கு பணம் வந்து சேரும்.

Recipes AMP · Quick view
View full