கொள்ளு கடையல் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரா செஞ்சு பாருங்க!!
அந்த காலத்தில் எல்லாம் கொள்ளு பயிறு கடையல் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க. இந்த கொள்ளு பயிறு ரெசிபி சாப்பிடாத ஆளே இருக்க மாட்டாங்க ஆனா இப்ப எல்லாம் இந்த பயிறு வச்சு கண்டிப்பா எதுவுமே யாருமே செஞ்சு சாப்பிடுவது கிடையாது. யாராவது ஒரு சிலர் வேணும்னா சாப்பிடுவாங்க ஆனா இந்த பயிறு சாப்பி
அந்த காலத்தில் எல்லாம் கொள்ளு பயிறு கடையல் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க. இந்த கொள்ளு பயிறு ரெசிபி சாப்பிடாத ஆளே இருக்க மாட்டாங்க ஆனா இப்ப எல்லாம் இந்த பயிறு வச்சு கண்டிப்பா எதுவுமே யாருமே செஞ்சு சாப்பிடுவது கிடையாது. யாராவது ஒரு சிலர் வேணும்னா சாப்பிடுவாங்க ஆனா இந்த பயிறு சாப்பிடுவதால் நிறைய நிறைய நன்மைகள் இருக்கு. ஒரு பழமொழி கூட இருக்கு கொளுத்தவனுக்கு கொள்ளு கொடுக்கணும் இளைத்தவனுக்கு எள்ளு கொடுக்கணும் அப்படின்னு, அந்த வகையில உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க கொள்ளு பயற அடிக்கடி சேர்த்துக்கலாம் கண்டிப்பா உடல் எடை குறையும்.
இது ஒரு அனுபவபூர்வமான உண்மை அப்படினு சொல்லலாம். கண்டிப்பா உடல் எடை குறைந்திடும் நீங்க உடல் எடையை குறைக்க நிறைய வழிமுறைகளை தேடுவீங்க. ஆனால் இதுதான் ஒரு சிறந்த வழிமுறை உங்களோட உணவுல அடிக்கடி கொள்ளு பயிறை சேர்த்துக்கோங்க. கொள்ளு வச்சு நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம் கொள்ளு வேகவைத்து தாளிச்சு தேங்காய் துருவல் எல்லாம் போட்டு ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம் சைடு டிஷ்ஷா வும் வச்சுக்கலாம். கொள்ளு துவையல் செய்யலாம் கொள்ளு ரசம் செய்யலாம்.
இந்த மாதிரி எந்த ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டாலும் ரொம்ப ரொம்ப நல்லது. கொள்ளு ரசம் சாப்பிட்டால் சளி இருமல் எல்லாம் பறந்து போயிடும் அப்படின்னு சொல்லுவாங்க. இவ்வளவு ரெசிபி இருக்கும்போது இன்னைக்கு நம்ம எல்லாத்தையும் விட சூப்பரான ஒரு கொள்ளு கடையல் தான் செய்ய போறோம். சுட சுட சாதத்தில் இந்த கடையல் ஊற்றி சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். இட்லி, தோசைக்கும் கூட இது நல்ல ஒரு காம்பினேஷன் அதனால கொள்ளு பயிறு வாங்கி கண்டிப்பா நீங்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு ரசம் கூட்டு பொரியல் செய்யாமல் இந்த ஆரோக்கியமான பயறு வாங்கி சூப்பரான ஒரு கொள்ளு கடையல் ரெசிபி செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் இதே செய்முறையில் செஞ்சு பாருங்க வீட்ல இருக்க கூடிய எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான உடல் எடையை குறைக்கக்கூடிய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய கொள்ளு பயிறு கடையில் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொள்ளு சட்னி செயவது எப்படி ?