காலையில் செய்த இட்லி மீதமாகி விட்டால் அதைக்கொண்டு சுவையான கொத்து இட்லி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில்

By Prem Kumar · 5/5/2026

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில் இன்று காலையும் உங்கள் வீட்டில் இட்லி செய்தீர்களா? அது மீதம் ஆகி விட்டதா? அதை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லையா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

பொதுவாக இட்லி மீதமாகிவிட்டால் அதை வைத்து இட்லி உப்புமா தான் அனைவரும் செய்வார்கள். அதுவும் எப்போதும் இட்லி மீதமானால் செய்யும் இட்லி உப்புமா என்றால் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தும் உணவாக மாறி வருகிறது. குழந்தைகள் இட்லி உப்புமாவைக் கண்டால் ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு இட்லியை கண்டாலே பிடிக்காமல் போய் உள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் இட்லி உப்புமா சமைக்காமல் அதில் ஆரோக்கியமான கொத்து இட்லி செய்து பாருங்கள்.

இந்த கொத்து இட்லியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமாக உண்பார்கள். இந்த கொத்து இட்லி செய்வதற்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். காலை உணவிற்கு எப்பவும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று சாப்பிடாமல் இந்த மாதிரி ருசியான கொத்து இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள். இல்லையெனில் மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் ரொம்ப குஷி ஆகிடுவார்கள். இப்போது சுவையான கொத்து இட்லி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : இட்லி பொடி செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full