தீராத கடனையும் தீர்க்கும் குபேர மந்திரம்!!
இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பணப் பிரச்சனை தான். இது இல்லாதவர்கள் மிக மிக குறைவு தான். அதிலும் பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த வருமானத்தில் பெரும்பாலான தொகையை செலவிட்டும் தவிப்பவர்கள் ஏராளம். பலருக்கு வாங்கிய கடன
இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பணப் பிரச்சனை தான். இது இல்லாதவர்கள் மிக மிக குறைவு தான். அதிலும் பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த வருமானத்தில் பெரும்பாலான தொகையை செலவிட்டும் தவிப்பவர்கள் ஏராளம். பலருக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செல்கிறதே என்ற கவலையே பெரும் கவலையாக இருக்கும். பலரும் நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று தான் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். முயற்சிகள் வெற்றி அடைவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள். அந்த வகையில் தீர்க்க முடியாத கடன் பிரச்சனைகள் விரைவில் தீர சக்தி வாய்ந்த குபேர மந்திரம் ஒன்று உள்ளது. அந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? யார் உச்சரிக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கடன் தீர்க்கும் குபேர மந்திரம்
செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரன், பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியவர். மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்ற இவர், செல்வத்தை பெருக செய்யக் கூடியவர். அதனால் தான் பெருமாளே குபேர பகவானிடம் கடன் வாங்கினார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேரனை வியாழக்கிழமை வீட்டிலேயே அவரது மந்திரத்தை கூறி வழிபட்டால் நம்முடைய வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். கடன் பிரச்சனையை தீர்க்கக்கூடிய குபேர மந்திரங்கள் பல உள்ளன. அவற்றில் பொதுவாகச் சொல்லப்படும் மந்திரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
மந்திரம்
“ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா”
மந்திரத்தை உச்சரிக்கும் முறை
இந்த மந்திரத்திற்கு யக்ஷர்களின் அரசரும், வைஸ்ரவணன் என்ற பெயரால் அறியப்படுபவரும், செல்வம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியுமான குபேரனே எனக்குச் செல்வத்தையும், தானிய வளத்தையும் கொடுத்து என்னுடை கடன் பிரச்சினைகளுக்கு ஒரு வழி காட்டு என்று பொருள். அதனால் வியாழக்கிழமை பூஜையறையில் உள்ள குபேரனின் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி குபேரனுக்கு பிடித்தமான இனிப்பு வகைகள் அதாவது கேசரி, பாயாசம், ஸ்வீட்ஸ் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வழிபட வேண்டும். இப்படி வழிபட்டு வந்தால் தீராத கடன் தொல்லைகள் தீரும் என்பது ஐதீகம்.
பொதுவாக குபேர வழிபாட்டுடன் மகாலட்சுமி வழிபாடு செய்தால் மிகவும் நல்லது. ஆகையால் வெள்ளிக்கிழமை வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன் ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து ஒரு தாம்பூலத்தில் ரூபாய் நோட்டுகள் அல்லது தங்க நகைகளை வைத்து இந்த மந்திரத்தை கூறி அதனுடன் லட்சுமி குபேர மந்திரம் கூறி வழிபட்டால் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் கால பைரவர் சன்னதிக்கு சென்று, தேய்பிறை அஷ்டமிகளில் விளக்கேற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, குபேர காயத்ரி மந்திரம் உச்சரித்து வந்தால் கோடி ரூபாய் கடன் இருந்தாலும் விரைவிலேயே நிவர்த்தி அடத்து விடும் என்பது நம்பிக்கை. இவ்வாறு நாம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அந்த கடவுளின் அருளால் நம்முடைய கடன்கள் அனைத்து கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும்.
இதனையும் படியுங்கள் : பண பிரச்சனையை தீர்க்கக்கூடிய குபேர சனீஸ்வரர் வழிபாடு!!