வீட்டில் கடன் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் சேர குபேரனை இப்படி வழிபாடு செய்யுங்கள்!!

எல்லோருக்குமே தான் செல்வந்தர் ஆக வேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கனவு எல்லோருக்குமே இருக்கும். கோடீஸ்வர யோகம் ஜாதகத்தில் இருந்தாலும் நாம் அதற்காக செய்யும் முயற்சிதான் நம்மை முன்னோக்கி நகர்த்தும். செல்வத்திற்கு அத

By ·

எல்லோருக்குமே தான் செல்வந்தர் ஆக வேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கனவு எல்லோருக்குமே இருக்கும். கோடீஸ்வர யோகம் ஜாதகத்தில் இருந்தாலும் நாம் அதற்காக செய்யும் முயற்சிதான் நம்மை முன்னோக்கி நகர்த்தும். செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி, குபேரர், சுக்கிரன் ஆகியோரை குறிப்பிடுகிறோம். இவர்களின் அருள் இருந்தாலே பணம், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் செல்வத்தின் தெய்வமாக கருதப்படுபவர் குபேரன். ஒருவர் வாழ்க்கையில் பண வரவு எப்போதும் இருக்க வேண்டும் என்றால் குபேரன் வழிபாடு மிகவும் முக்கியம். குபேரரை எவ்வாறு வழிபட்டால் வற்றாமல் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும் என இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

குபேரர் யார்?

குபேரர் என்பவர் இந்து மதத்தில் செல்வத்தின் கடவுளாகவும் யட்சர்களின் அரசரும் ஆவார். இவர் பிரம்மாவின் மகனான விச்ரவனுக்கும், ரிஷி பாரத்துவாசரின் மகளான இலவிதா என்பவருக்கும் பிறந்தவர். குபேரன் முதலில் ஒரு திருடனாக இருந்தார், பின்னாளில் சிவபெருமானை நினைத்து கடும் தவம் செய்து, அவரது பக்தியால் வட திசையின் அதிபதியானார் மற்றும் செல்வங்களின் காப்பாளராகவும் ஆனார். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை போன்ற சகோதரர்கள் உள்ளனர். இவர் சிவபகவானின் நெருங்கிய நண்பர் என்பதால் சிவசகா என்றும் அழைக்கப்படுகிறார்.

குபேர வழிபாடு 

பொதுவாக செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் குபேரரும் செல்வத்தின் அதிபதியாக விளங்குகிறார். மகாலட்சுமி தாயார் செல்வ வளங்களை பக்தர்களுக்கு வழங்கும் போது, குபேரர் அந்த செல்வங்களை பராமரிப்பதில் அதிபதியாக செயல்படுகிறார். அதனால் தான் பல ஆலயங்களிலும், மேலும் வீட்டில் செய்யப்படும் பூஜைகளிலும் லட்சுமி குபேர பூஜை ஒன்றாக செய்யப்படும். செல்வத்தை வேண்டி மகாலட்சுமியை வணங்கும் போது அவருடைய பரிபூரண அருளை பெற்ற குபேரனையும் வழிபடுவதால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமையில் குபேர வழிபாடு செய்வது எப்படி?

செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரன், பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியவர். குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும். அதனால் வியாழக்கிழமையன்று காலையில் எழுந்ததும் குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து வாசலில் பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும். பின் வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பூஜையறையில் குபேரர் படத்திற்கு முன் வட திசை நோக்கி குபேர விளக்கு அல்லது அகல் விளக்கு வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதில் கற்கண்டுகளை சேர்த்து பச்சை நிற திரி போட்டு விளக்கு ஏற்றவும். விளக்கின் இருபுறமும் தாமரை மலர் மற்றும் சங்கு வைக்கவும். மகாலட்சுமி தாயாருக்கு நைவேத்தியம் வைப்பது போலவே குபேரருக்கும் நெல்லிக்காய், பால் மற்றும் சர்க்கரையை நைவேத்தியமாக படைக்கலாம்.  

குபேரனுக்கு மிகவும் பிடித்தமானது சில்லறை நாணயங்கள் அதனால் நாணயங்களை குபேரர் சிலை அருகே பரப்பி வைக்கலாம் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து அதன் மேல் குபேர விளக்கை ஏற்றலாம். குபேர வழிபாட்டை வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் செய்வது நல்லது. குபேரனை நினைத்து வழிபடும் போது மனதில் குபேர மந்திரங்களை உச்சரித்து, முழு மனதுடன் வழிபட வேண்டும். அத்துடன் “ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா” என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். கடன் சுமையால் அவதிப்படுபவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, செழிப்பு நிலவும்.

இதனையும் படியுங்கள் : குபேர யோகம் பெற சிவபெருமான் வழிபாடு

Recipes AMP · Quick view
View full