தீடீரென்று உங்களுக்கு தேவைப்படும் பணத்தை அள்ளித்தரும் குங்கும பூ! இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும்!
இந்த கலியுகத்தில் பணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை நமக்கு யாரும் சொல்லி புரிய வைக்க வேண்டாம். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சொல்வார்கள். இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட பணம் எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது. அதனால் தான் நம் வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு
இந்த கலியுகத்தில் பணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை நமக்கு யாரும் சொல்லி புரிய வைக்க வேண்டாம். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சொல்வார்கள். இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட பணம் எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது. அதனால் தான் நம் வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியம் என்னும் நிலைக்கு நம் தள்ளப்பட்டிருக்கிறோம். என்னதான் நம் பணத்தை சேர்ப்பதற்கு பணத்தின் பின்னே ஓடிக்கொண்டே இருந்தாலும் நம்மளால் அதை சேர்த்து வைக்க முடிவதில்லை. பணத்தை சேர்த்து வைப்பதற்கு கூட நமக்கு யோகம் இருந்தால் தான் அது நடக்கும்.
பணத்தேவை ஒரு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. பணம் உள்ளவனுக்கு அதை எப்படி செலவழிப்பது என்று தெரியவில்லை, பணம் இல்லாதவர்களுக்கு அதை எப்படி சேர்ப்பது என்று தெரிவதில்லை. இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஆன்மீகம் நமக்கு பல தாந்திரீக பரிகாரங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இப்பதிவில் பணவரவை திடீரென எப்படி அதிகரித்துக் கொள்வது, அதற்குரிய பரிகாரம் என்ன என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
பண வரவை ஏற்படுத்தும் பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு மூன்றே பொருட்கள்தான் தேவை. அவற்றை நாம் நாட்டு மருந்து கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். நமக்கு தேவையான பொருட்கள் ஒரு மஞ்சள் காட்டன் துணி, ஐந்து சோழிகள் இந்த சோழியானது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அதன்மேல் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் கண்கள் போல் இருந்தால் மட்டுமே இச்சோலியை நாம் வாங்க வேண்டும். மூன்றாவதாக குங்குமப்பூ, இது சற்று விலை அதிகம் என்றாலும் இந்த பரிகாரத்திற்கு மூலப்பொருளே இந்த குங்குமப்பூ தான். எனவே எப்படியாவது இந்த குங்குமப்பூவை வாங்கிக் கொள்ளுங்கள்.
பீரோவில் வைத்துவிடுங்ஙள்
இப்பொழுது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் இந்த பொருட்களை மகாலட்சுமி தேவி புகைப்படம் முன்னால் வைத்து ஒரு தீபம் ஏற்றி வழிபட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மஞ்சள் துணியில் ஐந்து சோழி மற்றும் ஐந்து குங்குமப்பூ இதழ்களை வைத்து சிறு பொட்டணமாக முடிந்து கொள்ளுங்கள். இப்போது இந்த சிறு மூட்டையை மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து உங்களின் பணத் தேவையைப் பற்றியும், அத்தேவை தீர்வதற்கான வழியை வகுத்து தருமாறு மகாலட்சுமி தாயாரிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சிறு மூட்டையை நீங்கள் பணம் வைக்கும் பீரோவில் வைத்து விடுங்கள். அல்லது பீரோவில் எங்கேனும் ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பணதேவை தீரும் வரை
இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் பண வரவை தந்து மகாலட்சுமி தாயார் உங்களுக்கு அருள் புரிவார். இந்த பரிகாரத்தை உங்களுக்கு எப்பொழுது பணம் தேவை அதிகரிக்கிறதோ அப்பொழுது செய்து கொள்ளலாம். உங்கள் பண தேவை தீர்ந்தாலும் கூட இந்த குங்குமப்பூ மூட்டையை உங்கள் பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் உங்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும் பொழுது இந்த மூட்டையை புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள் அதிலுள்ள சோழியை அப்படியே பயன்படுத்தலாம்.
ஒருவேளை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வெள்ளி, செவ்வாய் என இரண்டு கிழமைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அக்கிழமையில் இம்மூட்டையே மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்வதனால் உங்கள் வீட்டிற்கு பணவரவு இன்னும் அதிகமாக இருக்கும். குங்குமப்பூ பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதனை உங்கள் வீட்டில் செய்து திடீர் பணவரவை அனுபவித்துக் கொள்ளுங்கள்.