கடன் தீர்க்கும் முருகப்பெருமான் பரிகாரம்!!
இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வாழ்க்கையிலுமே பணம் என்பது மிகவும் முக்கியமானது மேலும் அந்த பணத்தால் கடன் பிரச்சினைகளும் உண்டாகும். கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணத்தை சம்பாதிக்க ஓடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிகிறது என்றால் கடன
இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வாழ்க்கையிலுமே பணம் என்பது மிகவும் முக்கியமானது மேலும் அந்த பணத்தால் கடன் பிரச்சினைகளும் உண்டாகும். கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணத்தை சம்பாதிக்க ஓடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிகிறது என்றால் கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியவில்லை என்றால் ஆடி செவ்வாய்க்கிழமை என்று முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும். அந்த பரிகாரத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
செவ்வாய் பகவான்
கடன் பிரச்சினைகளுக்கு உரிய கிரகங்களில் செவ்வாய் பகவான் ஒருவர். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்கு உரிய கிழமை செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமைக்குரிய அதி தேவதையாக திகழ்ந்தவர் முருகப்பெருமான். அதனால் தான் நாம் செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்கிறோம். செவ்வாய்க்கிழமை அன்று குளிகை நேரத்திலோ அல்லது செவ்வாய் ஹோரையிலோ கடனுக்குரிய வட்டிகையோ அல்லது அசல் தொகையையோ திருப்பி செலுத்தும் பொழுது விரைவிலேயே கடன் தீரும் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் நிறைய உள்ளது அவற்றில் இந்த பரிகாரம் மிகவும் சிறந்தது.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை இரவு படுக்க செல்வதற்கு முன்பாக செய்துவிட்டு உறங்க வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரை இதற்காக பயன்படுத்தலாம் அல்லது கண்ணாடி பாட்டிலையும் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் எவர்சில்வர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முருகப்பெருமானை மனதார நினைத்து பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து அதில் கொடுக்கின்ற தண்ணீரை முக்கால் டம்ளர் அளவிற்கு ஊற்றி 1/2 ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு பன்னீரை சேர்க்க வேண்டும். பிறகு 11 நாணயங்களை அதற்குள் போக வேண்டும் இறுதியாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்க்க வேண்டும் பிறகு அந்த தண்ணீரை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இரவு முழுவதும் அது அப்படியே இருக்க வேண்டும் மறுநாள் காலையில் இதில் இருக்கக்கூடிய 16 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விட வேண்டும் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். எளிமையான இந்த பரிகாரத்தை நிச்சயமாக ஆடி மாதம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : நினைத்தது நடக்க முருகன் மந்திரம்