கேட்ட வரத்தை கொடுக்கும் தாமரை பூ பரிகாரம்!!
கேட்ட வரம் கேட்டபடி கிடைப்பதற்கு தாமரைப்பூ பரிகாரம் ஒரு சிறந்த பரிகாரம். மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கும் மலர் தான் தாமரை மலர் அதனால் இந்த தாமரை பூவுக்கு மகத்துவமான தெய்வீக ஆற்றலும் சக்திகளும் உள்ளது. மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த இந்த தாமரைப்பூ வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டி
கேட்ட வரம் கேட்டபடி கிடைப்பதற்கு தாமரைப்பூ பரிகாரம் ஒரு சிறந்த பரிகாரம். மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கும் மலர் தான் தாமரை மலர் அதனால் இந்த தாமரை பூவுக்கு மகத்துவமான தெய்வீக ஆற்றலும் சக்திகளும் உள்ளது. மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த இந்த தாமரைப்பூ வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கும். இதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவு விரிவாக காணலாம்.
பல தெய்வங்களுக்கு உகந்த தாமரைப்பூ
மகாலட்சுமி தாயார் மட்டுமில்லாமல் சக்தி லட்சுமி சரஸ்வதி பிரம்மதேவர் போன்ற நிறைய தெய்வங்களுக்கு உகந்த மலர்தான். இந்த தாமரை மலர் அந்த தெய்வங்கள் அனைத்தும் தாமரை மலரில் தான் வீற்றிருப்பார்கள். நீரில் போகக் கூடிய இந்த பெரிய மலர்கள் கடவுளுக்கு நிகராகவே கருதப்படுகிறது. பல தெய்வங்கள் அமர்ந்திருக்கும் மலர் என்பதால் இதற்கு தெய்வீக சக்தி அதிகம் என்று கூறலாம்.
தாமரை மலர் வழிபாடு
ஒரே ஒரு தாமரை மலர் இருந்தால் போதும் பல பிரச்சினைகள் தீரும் என்று கோவிலுக்கு போகும் போதெல்லாம் தாமரை மலரை அர்ச்சனைக்கு வாங்கி செல்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் தடை இல்லாமல் நடக்கும். தாமரை மலரை தெய்வத்தின் திருவடியில் வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்கும். இந்த மலரை வீட்டில் இருக்கக்கூடிய தெய்வப் படங்களுக்கு சாற்றி வழிபடுவதன் மூலம் வேண்டிய வரத்தை அடையலாம். பணரீதியான பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தன்மை தாமரை மலருக்கு உண்டு. தாமரை மலரை மகாலட்சுமி தேவியாரின் திருவடியில் வைத்து தினமும் மூன்று நெய் விளக்குகள் இயற்றி வழிபாடு செய்து வந்தால் சகலவிதமான சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். எப்பேர்ப்பட்ட துன்பங்களும் இந்த தாமரை மலர் வழிபாட்டினால் மறைந்துவிடும்.
தியானம் செய்ய உகந்த தாமரை
தாமரை மலர் மட்டுமில்லாமல் அதனுடைய விதைகளை மணியாக கோர்த்து அதனை தியானத்திற்காக கைகளில் வைத்து பயன்படுத்துவார்கள். அப்படி அதனை தியானத்திற்காக நாம் பயன்படுத்தும் போது எந்தவித இடையூறுகளும் இல்லாமல் தியானம் செய்வதற்கு தாமரை விதைகள் பயன்படும். தாமரை விதைகள் கிடைத்தால் அதனை பூற்றி அருகில் வைத்து வழிபட்டு வர தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நன்றாக தொழில் நடக்கும். மேலும் தொழில் செய்யும் இடத்திலும் கல்லாப்பெட்டியில் தாமரை விதைகளை போட்டு வைத்தால் பணத்தை ஈர்த்து கொடுக்கும் வீண் விரயங்கள் ஆகாமல் தடுக்கும்.
தாமரைத்தண்டு திரி தீபம்
மேலும் தாமரை மலரின் தண்டுகளைக் கொண்டு திரிகள் தயாரிக்கப்படுகிறது அந்த திரிகளை விலக்கில் போட்டு தீபம் ஏற்றுவதால் சகலதோஷங்களும் நீங்குவதாக ஐதீகம் உள்ளது. கடன் பிரச்சனைகள் தொழில் பிரச்சனைகள் என அனைத்தும் தீரும் எனவே மாலை நேரத்தில் குபேர மூலையில் குபேர விளக்கில் தாமரை தண்டு திரி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். வெண்தாமரை அல்லது செந்தாமரை படங்களை வீட்டில் மாட்டி வைப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீரும். 20 இதழ்களில் இருந்து ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை பூக்கள் நிறைய உள்ளது தாமரை பூக்கள் அபூர்வ வகையாகவே கருதப்படுகிறது. எனவே இதனைக் கொண்டு செய்யப்படும் வழிபாடுகளையும் மறக்காமல் செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடனை தீர்க்கும் கால பைரவரின் பரிகாரம்