அதிர்ஷ்டமும், பணமும் வீடு தேடி வர வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள்!

இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு கூட மருத்துவமனைகளில் சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த உயிர் இறக்கு தரு

By ·

இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு கூட மருத்துவமனைகளில் சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த உயிர் இறக்கு தருவாயில் இருக்கும் போது. அதே உயிர் இறந்த பின்னும் அதற்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி மனிதனின் வாழ்வின் ஒரு அங்கமாகவே தற்போது பணம் என்பது மாறிவிட்டது அப்படி மனிதனின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் இந்த பணம், செல்வம், சொத்து சுகங்களை எப்படி நம் வீட்டிற்கு உடனடியாக கொண்டு வருவது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

திதி நித்யா தேவிகளில் ஒருவரான பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா தேவிக்கு நாம் உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடுகள், பூஜைகள் செய்து வருவதன் மூலம் உங்களின் வீட்டுக்கு தேவையான அளவு செல்வங்களையும் அதிர்ஷ்டத்தையும் உடனடியாக உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதனை பார்க்கலாம் வாருங்கள். நித்திய தேவிகளில் 15 ஆம் நித்திய தேவியான சித்ரா தேவி பளபளவெ என மின்னும் மேனி உடையவள். சித்ரா தேவி பல்வேறு ரத்தினங்கள் இருக்கும் மகுடத்தை தான் சூடி இருப்பாள்.

மேலும் தேவி வெண்பட்டாடை உடுத்தி தன் உடல் முழுவதும் பல வகையான தங்கம், வைரம் மற்றும் ரத்தினங்கள் போன்ற ஆபரணங்களை அணிந்து அழகின் முழு உருவமாக காட்சி தருபவர். மேலும் வரதம், வாசம், அங்குசம் அபயம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட சித்ரா தேவியை தினசரி பூஜை செய்து வழிபட்டு வரும் அவளின் பக்தர்களின் பயத்தை நீக்கி அவர்களுக்கு தேவையான அதிர்ஷ்டம் செல்வங்களையும் உடனடியாக தரும் சக்தி கொண்டவள்.

ஆகையால் சித்ராதேவியை வேண்டி “ஒம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவிப்ரசோதயாத்” என்ற மந்திரத்தை தினசரி அல்லது பௌர்ணமி, கிருஷ்ணபட்ச பிரதமை போன்ற நாட்களில் வழிபட்டு வந்தால் உங்களுக்கு தேவையான திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வத்தையும் தாய் உங்களுக்கு அருள்வாள்.

Recipes AMP · Quick view
View full