இந்த பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்!

உங்களில் பலரும் இது போல வார்த்தைகளை கேள்விபட்டு இருப்பீர்கள், ஒரு கல்யாணம் பன்னான் அவன் வாழ்க்கையை மாறிடுச்சி, இந்த வீட்டுக்கு குடி வந்தது தான் ராசி, குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வந்துருச்சி, இது போல நீங்கள் பல நபர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள். இப்படி தான் அதிர்ஷ்டம

By ·

உங்களில் பலரும் இது போல வார்த்தைகளை கேள்விபட்டு இருப்பீர்கள், ஒரு கல்யாணம் பன்னான் அவன் வாழ்க்கையை மாறிடுச்சி, இந்த வீட்டுக்கு குடி வந்தது தான் ராசி, குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வந்துருச்சி, இது போல நீங்கள் பல நபர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள். இப்படி தான் அதிர்ஷ்டம் நாம் வீட்டுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை அதனால் இன்று இந்த அதிர்ஷ்டத்தை உங்கள் வீட்டுக்கு கொண்டு வருவது பற்றிதான் நாம் இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் தீராத தோஷம் இருந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது துளியும் இருக்காது. மேலும் உங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது இருக்காது. பலர் அவர்கள் பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக கூட அவர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதில்லை.

மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு, அடுத்தவர்களை பார்த்து பொறாமைப் படுபவர்களையும் அதிர்ஷ்டம் கிடைக்காது. இதில் எதாவது ஒன்றின் மூலம் அதிர்ஷ்டம் நம்மளை நெருங்காது அதற்கு சில பரிகாரங்கள் செய்வதன் அதிர்ஷ்டம் நம்மளை தேடி வரும். இப்படி அதிர்ஷ்டம் நம்மை தேடி வர உதவும் ஒரு பொருளை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். ஒருவருக்கு மன நிம்மதி மற்றும் செல்வசெழிப்போடு வாழும் வாழ்க்கை இந்த இரண்டுமே கிடைத்து விட்டால் போதும் அவர்களை அதிர்ஷ்டசாலி என சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இந்த அதிர்ஷ்டத்தை நமது வீட்டிற்கு கொண்டுவர முருகப் பெருமானின் வாகனமாக மயிலின் இறகை நாம் பணம் வைத்திருக்கும் பெட்டியில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும்.

ஆனால் இது மட்டும் போதாது அதற்கு சில வழிமுறைகள் உண்டு அதை பற்றி காணலாம். ஒரு கருநீலம் நிறத்தில் உள்ள துணியை எடுத்து கொள்ளுங்கள் அந்த துணி பட்டு அல்லது வெல்வெட் தூணியாக இருக்க வேண்டும் பின்பு எடுத்த துணியை பணம் வைக்கும் இடத்தில் விரித்து விடுங்கள். பிறகு இந்த துணி மீது ஒரு மயில் இறகை வைத்து அதன் மேல் உங்கள் பணத்தை வைத்து கொண்டே வாருங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் பணம் அதிகம் விரையம் ஆகாமல் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

Recipes AMP · Quick view
View full