Advertisement
ஆன்மிகம்

2024 மகா சிவராத்திரி இன்று சிவயோகத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Advertisement

2024 ஆம் வருடம் மகா சிவராத்திரி ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரியை உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதிலும் இந்த வருடம் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் மங்களகரமான சித்தயோகம் சிவயோகம் ஷிரவண நட்சத்திரம் நட்சத்திரம் மற்றும் சுக்கிர பிரதோஷம் ஆகிய நான்கு யோகங்களும் 300 வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர போகிறது. எனவே தான் இந்த வருட மகா சிவராத்திரியை நாம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கிறோம்.

இந்த மகா சிவராத்திரி அன்று சிவனோடு சேர்த்து பார்வதி தேவியையும் வணங்கினால் நாம் கேட்டு வரங்களை எல்லாம் கொடுப்பார். உதாரணமாக தேவர்கள் மகா சிவராத்திரி அன்று சிவபெருமானின் பார்வதி தேவியையும் வணங்கி அவர்கள் கேட்ட வரங்களை பெற்று இருக்கிறார்கள். எனவே நாமும் சிவபெருமானை முழுமனதோடு பூஜை செய்து வழிபட்டு அவருடைய அருளையும் நாம் கேட்ட வரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அரிய நாள் அன்று மகர ராசியில் சந்திரனில் சிவயோகத்தோடு ஷிரவண நட்சத்திரம் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் விரிவாகவும் அவர்கள் என்னென்ன அதிர்ஷ்டங்களை பெறப் போகிறார்கள் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

Advertisement

மேஷ ராசி

ஜோதிட சாஸ்திரப்படி இனிமேல் வரப்போகும் காலம் உங்களுக்கு மிகவும் நல்ல காலமாக அமையும். பார்வதி தேவியின் அருளை பெற போகிறீர்கள் எனவே நீங்கள் யாரையாவது காதலித்தால் அந்த காதல் உங்களுக்கு கைக்கூடும். வீட்டில் ஏதாவது ஒரு சுப காரியங்கள் நடக்கும். அந்த சுப காரியம் மூலமாக உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் தங்கும். சமயப் பணிகளில் அதிகமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மொத்தத்தில் இனி வரப்போகும்

Advertisement
காலம் உங்களுக்கு ஏற்ற காலமாக மிகவும் மகிழ்ச்சியான காலமாகத்தான் இருக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி முதல் அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும். திருமணத்திற்காக திட்டமிட்டு இருந்தால் நீங்கள் திட்டமிட்டபடி திருமணம் நடக்கும். உங்கள் வீட்டிற்கு புதிய விருந்தாளிகளின்

Advertisement
வரவு அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த மகா சிவராத்திரி முதல் உங்களுக்கு மங்களகரமான காலம் இருக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு வருகின்ற காலம் மிகவும் அதிர்ஷ்டமான மிகவும் நல்ல காலமாகும். உங்களுடைய காதலை வீட்டில் சொல்லி அதனை கைகூட வைப்பதற்கான முயற்சிகளை இந்த காலத்தில் நீங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் காதல் உறவும் பலரும் மேலும் நீங்கள் மத யாத்திரை செல்லும் நிலையும் வரலாம். உங்கள் அதிகமான நேரத்தை குடும்பத்திற்காக செலவு செய்து குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க முயற்சி செய்வீர்கள்

கும்ப ராசி

மகா சிவராத்திரி முதல் உங்களுக்கு பொருளாதார வளர்ச்சிகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்லும் உங்களின் கனவு நனவாகும். நீங்கள் ஏதாவது ஒரு தவறான செயல் செய்து கொண்டிருந்தால் இந்த காலகட்டம் அதனை சரியாக்கி உங்களை நல்வழியில் செலுத்தவும். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சிறப்பு அருளை பெற்று மத விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மொத்தத்தில் உங்களுக்கு பணவரவு ஏற்பட்டு பொருளாதார நிலையும் மாறும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

10 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

20 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago