தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் அல்வா விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். மாம்பழ சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இர
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் அல்வா விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். மாம்பழ சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு அல்வா தயாரித்தால், அதன் சுவை இன்றும் அலாதியாக இருக்கும்.
மாம்பழ அல்வா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்சக்தி கிடைக்கும். மாம்பழத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புக்கள் நன்றாக இருக்கும்.
மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும். இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. எனவே மாம்பழத்தில் அல்வா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கலாம்.