தீராத நோய்களை தீர்க்கும் மந்திர தீர்த்தம்!!
ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தனித்துவமான சக்தி உண்டு. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்திற்கும் கூட பொருளும், மகத்துவமும் உண்டு.நம்முடைய ஆன்மீகத்தில் நாம் செய்யக்கூடிய பலவிதமான காரியங்கள் அறிவியல் ரீதியாகவும், உண்மைக்கு நிகரானதாகவே கருதப்படுகிறது. திக்கற்றவரு
ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தனித்துவமான சக்தி உண்டு. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்திற்கும் கூட பொருளும், மகத்துவமும் உண்டு.நம்முடைய ஆன்மீகத்தில் நாம் செய்யக்கூடிய பலவிதமான காரியங்கள் அறிவியல் ரீதியாகவும், உண்மைக்கு நிகரானதாகவே கருதப்படுகிறது. திக்கற்றவருக்கு தெய்வம் துணை என்பார்கள். இது கஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். சிலருக்கு எவ்வளவு தான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாலும் நோயின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் பெருமாளின் மந்திரத்தை கூறி நாம் தீர்த்தம் அருந்தினால் நோய்கள் அனைத்தும் பறந்து விடும் என நம்பப்படுகிறத. அதைப்பற்றி இந்த ஆன்மீகம் பதிவில்தெரிந்து கொள்ளலாம்.
நோய்கள் தீர்க்கும் தீர்த்தம்
நோய் வந்தால் டாக்டரிடம் தானே செல்ல வேண்டும். தீர்த்தம் குடித்தால் எப்படி நோய் குணமாகும்? என பலருக்கும் மனதில் தோன்றலாம். நோய் வருவதற்கு அறிவியல் ரீதியாக எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், ஆன்மீக ரீதியாக நாள், கிழமை, திதி ஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் பெருமாள் கோவிலில் வழங்கக்கூடிய துளசி தீர்த்தத்தை நாம் அருந்துவதன் மூலம் பெருமாளின் அருள் பெற முடியும் என சொல்லப்படுகிறது. துளசி தீர்த்தம் அல்லது துளசி நீர், ஒரு புனிதமான தீர்த்தமாகும், இது பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது துளசி இலைகளுடன் தண்ணீரைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது, மேலும் இது பல்வேறு மருத்துவ மற்றும் ஆன்மீக நன்மைகளைக் கொண்டுள்ளது. துளசி தீர்த்தம் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடல் உஷ்ணம் குறையும், மற்றும் சில நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.
பெருமாள் கோவிலில் தரப்படும் துளசி தீர்த்தம் நிறைய நோய்களை தீர்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! துளசி, இந்து மதத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இது விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிடித்தமானதாக நம்பப்படுகிறது. எனவே, துளசி தீர்த்தத்தை வீட்டில் வைத்து வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த தீர்த்தத்தை நாம் வீட்டில் பூஜை செய்யும் போது வைக்க காரணம் நாம் செய்யக்கூடிய வழிபாட்டில் பஞ்சபூதங்களின் தத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக தான். அவ்வாறு வைக்கக்கூடிய தீர்த்தம் பெருமாள் கோவில் தீர்த்தத்திற்கு இணையான பலனை தர வேண்டும் என்றால் ஒரு சிறப்பான மந்திரத்தை கூறி நாம் பூஜை அறையில் வைக்க வேண்டும்.
மந்திரம்
” அட்சுதாய நமஹ ஆனந்தாய நமஹ. கோவிந்தாய நமஹ “
நோய்கள் விரைவில் குணமாக வேண்டும் என்பவர்கள் பூஜையறையில் இந்த துளசி தீர்த்தத்தை வைத்து இந்த மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் நாம் கூறும் மந்திரங்களுக்கு மந்திர சக்தி ஏற்பட்டு, அதன் காரணமாக விரைவில் உடலில் ஏற்பட்ட நோய்கள் குணமாகும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே இந்த மந்திரங்களை சொல்லி இந்த தீர்த்தத்தை அருந்தும் போது அதி விரைவாக பலன் தரும்.
இதனையும் படியுங்கள் : அடகு வைத்த நகையை விரைவில் திருப்ப சொல்ல வேண்டிய மந்திரம்!!