மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ருசியான கொத்தவரங்காய் மசாலா இப்படி செஞ்சி பாருங்க! சுடு சாதத்துடன் சாப்பிட பக்காவான கூட்டு!

என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் கூட்டு, கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து வ

By Prem Kumar · 22/11/2023

என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் கூட்டு, கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த கொத்தவரங்காய் மசாலா செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

கொத்தவரங்காய் மிகவும் அருமையான சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு உணவுப் பொருள். ஆனால் கொத்தவரங்காய் பலருக்கு பிடிக்காது. அதற்கு அவர்கள் அதனை சரியாக சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை சரியாக சமைத்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு இணை எதுவும் வர முடியாது. கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைகளைப் பெற்றுள்ளன.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். வழக்கமாக அனைவரும் கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்ளமாட்டார்கள். இந்நிலையில் இப்படி ஒரு முறை கொத்தவரங்காய் மசாலா செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த கொத்தவரங்காய் மசாலா செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full