மகாளய பட்ச கால வழிபாடு செய்ய வேண்டிய முறை!!

ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் இல்லாமல் முன்னேறுவதற்கு குலதெய்வ வழிபாடும் முன்னோர்களுடைய அருளும் தேவைப்படும். முன்னோர்களின் அருளை பெறுவதற்கு அமாவாசை நாள் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந

By ·

ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் இல்லாமல் முன்னேறுவதற்கு குலதெய்வ வழிபாடும் முன்னோர்களுடைய அருளும் தேவைப்படும். முன்னோர்களின் அருளை பெறுவதற்கு அமாவாசை நாள் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்து தானங்களை செய்வதன் மூலம் முன்னோர்களின் அருளை பெற முடியும். அப்படிப்பட்ட முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து நம்முடன் இருந்து நமக்கு அருளாசி புரியக்கூடிய நாட்கள் தான் மகாளய பட்ச நாட்கள் என்றும் கூறப்படுகிறது. இதைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

அமாவாசை

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களை வழிபடாதவர்கள் கூட தை ஆடி புரட்டாசி போன்ற முக்கியமான அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபாடு செய்வது சிறப்பானது. அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை தான் மகாளய பட்ச அமாவாசை என்று கூறுவார்கள். இந்த அமாவாசைக்கு 15 நாட்களுக்கு முன்பாக இருக்கக்கூடிய 15 நாட்களும் மகாளாயபட்ச காலங்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட நாட்களில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

மகாளய பட்ச காலம்

இந்த காலம் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி திங்கட்கிழமையிலிருந்து செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த 15 நாட்களும் முன்னோர்களின் நினைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது நம்முடைய முன்னோர்கள் எந்த திதியில் இறந்தார்கள் என்பதை பொறுத்து தான் நாம் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். இந்த 15 திதிகளுக்குள் ஏதாவது ஒரு திதியாகத்தான் இருக்கும் அதனால் தான் இந்த 15 நாட்களும் முன்னோர்களை நினைத்து நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

மஹாளய பட்ச காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் கூடாதவை

இந்த காலங்களில் வீட்டு வாசலில் அரிசி மாவு மற்றும் கோலப்பொடி பயன்படுத்தி கோலம் போடுவதை தவிர்த்து காவி பொடியை மட்டும் பயன்படுத்தி கோலம் போட்டுக் கொள்ளலாம். மஞ்சள் நிற பொடியை பயன்படுத்தி நிச்சயமாக கோலம் போடவே கூடாது. ஆண்கள் இந்த 15 நாட்களும் இறந்த முன்னோர்களை‌ நினைத்து தண்ணீரும் எள்ளும் இறைக்க வேண்டும். மேலும் அசைவம் சாப்பிடுவதையும் தவிர்த்து காக்கைக்கும் முதலில் உணவு வைத்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும்.

தீப வழிபாடு

மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டு வரவேற்பறையில் தெற்கு நோக்கியவாறு ஒரு சிறிய தாம்பாளத் தட்டை வைத்து அதில் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரையும் இனிப்பு பொருளையும் நெய்வேதியம் ஆக வைத்து முன்னோர்களை நினைத்து மனதார வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் எரிய வேண்டும் ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்து அதே இடத்தில் அப்படியே விட்டுவிட வேண்டும் மறுநாள் காலையில் தீபத்தை எப்போதும் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும் இனிப்பு பொருளை எறும்புகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக முன்னோர்களின் அருளை பெற முடியும்.

இதனையும் படியுங்கள் : காகம் வீட்டிற்கு வருவதற்கான அர்த்தங்கள்

Recipes AMP · Quick view
View full