- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே உலர் மொச்சை பிரியாணி ஆகும்.
பிரியாணியில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது உலர் மொச்சை பிரியாணி. இவை ஒரு கலக்கலான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. அது மட்டுமின்றி உலர் மொச்சையில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் சுலபமானது தான். விசேஷ நாட்கள், பிறந்த நாட்கள், அல்லது விருந்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு வரும் பட்சத்தில் வழக்கமாக செய்து பரிமாறப்படும் பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ்களுக்கு பதிலாக இந்த உலர் மொச்சை பிரியாணியை பரிமாறி அசத்தலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள் :
Ingredients
Method
முதலில் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைவிழுதாக அரைக்கவும்.
பாசுமதி அரிசியை கழுவி சுத்தம்செய்து பின் 15 நிமிடம் ஊறவிடவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
இதில் மூன்றரைகப் நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள், அரிசியை சேர்க்கவும். பின்னர் ஊறவைத்த மொச்சைக்கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
பின் விசில் அடங்கி ஆவி வெளியேறியதும்,வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும்.சுவையான உலர் மொச்சைபிரியாணி தயார்..






