இந்த விலங்கின் ஆசிர்வாதம் கிடைத்தால் மட்டும் போதும் பணம் வீடு தேடி வரும்!

தற்போதைய உலகத்தில் ஒரு மனிதன் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு முக்கியமான ஒரு மூன்று தேவைகள் மட்டும் சரியாக இருந்தால் போதும். நமக்கு முக்கியமான தேவை ஏனென்றால் முதலில் நினைவுக்கு வருவது பணம் தான், இந்த உலகில் பணம் இல்லாமல் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது,

By ·

தற்போதைய உலகத்தில் ஒரு மனிதன் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு முக்கியமான ஒரு மூன்று தேவைகள் மட்டும் சரியாக இருந்தால் போதும். நமக்கு முக்கியமான தேவை ஏனென்றால் முதலில் நினைவுக்கு வருவது பணம் தான், இந்த உலகில் பணம் இல்லாமல் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது, அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு உயர்ந்து விட்டது. அதன் பின்பு உடல்நலம் ஒருவர் உடல் நலம் சரியில்லை என்றால் அவன் கஷ்டப்படுவதை விட அவனை சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து கஷ்டப்படும் அளவிற்கு சூழ்நிலை உண்டாகும், அதனால் உடல்நலமும் முக்கியமான ஒன்று. மேலும் முக்கியமான ஒன்று ஒரு மனிதனின் நிம்மதியை பறிக்கக்கூடிய கடன். நாம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கடன் பிரச்சனையில் இருந்தால் கூட நாம் ஒரு வேளை கூட நிம்மதியாய் இருக்க முடியாது. இது போன்ற இந்த 3 பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீக குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

உடல் நலம்

நாம் நாம் முதலிலேயே பார்த்தோம் ஒருவனுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை அவனால் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களையும் சமாளித்து வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும். ஆனால் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும்போது அவன் கஷ்டப்படுத்துவதும் இல்லாமல் அவனை சுற்றியுள்ள ஒவ்வொருவரும் கஷ்டப்படுத்தும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து விடும். அதனால் தான் எப்போதும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனமுடன் செயல்பட வேண்டுமென அனைவரும் கூறுகிறார்கள்.

உடல்நல பரிகாரம்

அதனால் உங்களின் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் உங்களை விட்டு விலகுவதற்கு மஞ்சள் தூள் மற்றும் தேன் இந்த இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மருக்கு அபிஷேகம் செய்ய இந்த இரண்டு பொருட்களையும் வழங்க வேண்டும். நரசிம்மருக்கு அபிஷேகம் செய்த தேனை வாங்கி வந்து உங்கள் வீட்டில் உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு கொடுக்கும்போது உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் விலகும்.

கடனா பிரச்சனை தீர பரிகாரம்

உங்களை நிம்மதியாக வாழ விடாமல் கழுத்தை நெரித்து பிடிக்கும் அளவிற்கு கடன் சுமை இருந்தாலும் அனைத்து கடன் சுமையும் நீங்குவதற்கு சனிக்கிழமை என்று சனி ஹோரையில் விநாயகர் அல்லது ஆஞ்சநேயரை வழிபட்டு வர வேண்டும். இவர்கள் இருவரையும் நாம் வணங்கி வரும் பொழுது நம்முடைய கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கம். அது மட்டுமில்லாமல் சனிக்கிழமையில் கோமியத்தை கொண்டு வந்து உங்கள் தொழில் நடத்தும் இடம், வியாபாரம் செய்யும் இடம் அல்லது உங்கள் வீடுகளில் தெளித்து வந்தால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகி கடன் சுமை குறுகிய காலத்திலேயே தீர்ந்துவிடும்.

கஜ வழிமாடு

ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்வதற்கு அத்தியாவசியமான பணம் உங்களிடம் சேரவில்லை என்று வருத்தப்படுபவர்கள். உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து, வீடு செல்வ செழிப்போடு இருப்பதற்கு கஜா வழிபாடு செய்ய வேண்டி இருக்கும். கஜ என்பது யானை குறிக்கும் சொல்லாகும், அதாவது நாம் யானை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் நம்முடைய வாழ்க்கையில் புதியதாக மாற்றங்கள் ஏற்பட்டு உங்கள் வாழ்க்கையை செல்வ செழிப்போடு மாற வேண்டும் என்றால் இந்த கஜ வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று.

பணம் சேர பரிகாரம்

வீட்டில் உள்ள பெரியோர்கள் பேச்சு வழக்கில் யானையை ஊதினால் தடை விலகும் என்று கூறுவார்கள். அதற்கு அர்த்தம் யானையின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்போது நமக்கு வரும் தடைகள் அனைத்தும் நீங்கி, நமக்கு வெற்றிகள் மட்டுமே கிடைக்கும் என்பது தான் அதன் முழுமையான அர்த்தம். அதனால் நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் யானையின் பரிபூரணமான ஆசீர்வாதத்தை நீங்கள் பெற வேண்டும் என்பத நினைவில் வைத்து கொள்ளுங்கள்.அவ்வாறு யானையின் ஆசிர்வாதத்தை நீங்கள் பெற்றுவிட்டால் போதும் பணம், செல்வம் அனைத்தும் தானாகவே உங்களிடம் வந்து சேரும்.

Recipes AMP · Quick view
View full