பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? பண வசியம் இப்படி மட்டும் செய்து பாருங்க!

நம்மில் பலர் பல திறமைகள் இருந்தும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் இருக்கிறோம். அதற்கு பணமும் ஒரு முக்கிய காரணமாகும், இதற்கு தான் நம் முன்னோர்கள் குபேர வசியம் என்ற பரிகாரம் பற்றி கூறியுள்ளார்கள். அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள். இதனை செய்தால் உங்கள் வீட்டில் இ

By ·

நம்மில் பலர் பல திறமைகள் இருந்தும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் இருக்கிறோம். அதற்கு பணமும் ஒரு முக்கிய காரணமாகும், இதற்கு தான் நம் முன்னோர்கள் குபேர வசியம் என்ற பரிகாரம் பற்றி கூறியுள்ளார்கள். அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

இதனை செய்தால் உங்கள் வீட்டில் இரண்டு நாளில் பணம் புரளும். அனைவருக்கும் கோடியில் புரள வேண்டும் என்ற ஆசை இருக்கும். லட்சத்தில் புரளுபவனுக்கு கோடியில் புரள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஞாயமான உழைப்பினால் வரும் இந்த ஆசை நியாயமானது தான் அதற்கு தான் குபேர வசியம் என்று ஒன்று உள்ளது.

பண வரவை அதிகரிக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காய் இதை மூலப்பொருளாய் வைத்து நாம் இந்த குபேர வசியத்தை செய்ய இருக்கிறோம். ஜாதிக்காய் பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது ஜாதிக்காயுடன் நாம் பச்சை கற்பூரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் மற்றும் மண் தட்டு எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் ஜாதிக்காயையும் பச்சை கற்பூரத்தையும் மண் தட்டியில் தான் வைக்க வேண்டும். இப்போது இதை நீங்கள் உங்கள் பூஜை அறையில் வைத்து வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை பூஜை செய்யலாம்.

மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற

நீங்கள் உங்கள் பூஜை அறையில் அமர்ந்து மகாலட்சுமி பாடலை பாடி மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். அப்படி இல்லை எனில் மகாலட்சுமி தாயாரின் பாடலை அங்கு அமர்ந்து அமைதியாக கேட்க வேண்டும்.

மனதார பாடல்களை பாடியோ அல்லது கேட்டோ, மகாலட்சுமி தாயாரிடம் உங்கள் வேண்டுகோளை மனதார வேண்டி முன் வைத்தால் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகமானது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

பூஜை அறையில் தெய்வத்திற்கு நைவேத்தியமாக பால் பாயாசத்தை வைத்து வழிபட வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சனிகோரையில் பச்சை கற்பூரம் மற்றும் ஜாதிக்காய் இவற்றை நீங்கள் பணம் புழங்கும் இடத்தில் எடுத்து வைக்க வேண்டும். அப்படி வைத்தால் உங்களுக்கு பணவரவு வரும் வந்த பணமும் நீடித்து நிற்கும்.நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full